செய்திகள்

இன்னும் எட்டு நாட்கள் தான்: அத்தி வரதரைக் காணத் தயாராகுங்கள்..!!

தினமணி


தமிழகத்தின் தனிப்பெரும் சிறப்பு கொண்ட ஆன்மிகத் தலமான காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் அத்தி வரதரைத் தரிசிப்பதற்கான வாய்ப்பு ஆன்மிக அன்பர்களுக்கு இந்த ஆண்டு கிடைக்கவுள்ளது.

40 ஆண்டுகளுக்குப் பின் அத்தி வரதரின் தரிசனம் தொடர்பான செய்திகள் வெளிவந்தபோது இது குறித்துத் தெரியாத பலருக்கும் அவரைத் தரிசனம் செய்தே ஆக வேண்டும் என்ற ஆவல் அதிகரித்துள்ளது. அபூர்வ அத்தி வரதர் வரும் ஜூலை முதல் தேதியிலிருந்து ஆகஸ்ட் 17-ஆம் தேதி வரை பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறார். 

காஞ்சிபுரத்தில் சுமார் 1500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயில் உள்ளது. இது 108 திவ்ய தேசங்களில் ஒன்று. இக்கோயிலின் ராஜகோபுரம் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. மூலவராக வரதராஜப் பெருமாளும் பெருந்தேவி தாயாரும் உள்ளனர். வேகவதி ஆறும், அனந்தசரஸ் குளமும் கோயில் தீர்த்தங்களாக விளங்குகின்றன. காஞ்சிபுரத்தின் தெற்கே அமைந்துள்ள இக்கோயிலில் ஐராவதம் யானையே மலைவடிவம் கொண்டு நாராயணனைத் தாங்கி நின்றதால் இத்தலம் அத்திகிரி என்றும் அழைக்கப்படுகிறது. தங்கப்பல்லி, வெள்ளிப் பல்லி தரிசனம் இக்கோயிலின் மற்றொரு சிறப்பு. 

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சியளிக்கும் அத்திவரதரை எதற்காக குளத்தில் வைக்கப்பட்டுள்ளனர் என்பதைப் பற்றி முந்தைய கட்டுரையில் பார்த்தோம். அத்தி வரதருக்கு இந்தாண்டு எப்போது உற்சவம்? காஞ்சிபுரத்தில் இதுகுறித்து செய்யப்பட்டுள்ள சிறப்பு ஏற்பாடுகள் பற்றியும் விடியோவை பார்த்துத் தெரிந்துகொள்வோம்.


அத்தி வரதர் எதற்காக குளத்தில் வைக்கப்பட்டுள்ளார்? என்பதைத் தெரிந்துகொள்ள இந்த லிங்கை https://www.youtube.com/watch?v=i8_Z4s-VlsY கிளிக் பன்னுங்க.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 கிரிக்கெட்டில் துரத்திப் பிடிக்கப்பட்ட அதிகபட்ச இலக்குகள்!

தமிழ்நாட்டில் மே.1 வரை ’வெப்ப அலை’ எச்சரிக்கை

ஐபிஎல் வரலாற்றில் தில்லியின் அதிகபட்ச ரன்கள்: மும்பைக்கு 258 ரன்கள் இலக்கு!

விழுப்புரம், புதுச்சேரியிலிருந்து திருப்பதிக்கு இயக்கப்படும் ரயில்கள் பகுதியளவில் ரத்து

ராமம் ராகவம் படத்தின் டீசர்

SCROLL FOR NEXT