செய்திகள்

மதுரை கள்ளழகர் கோயிலில் மார்ச் 18-ல் திருக்கல்யாண வைபவம் 

கள்ளழகர் கோயிலில் வரும் 18-ம் தேதி பங்குனி மாத திருக்கல்யாணம் தொடங்குகிறது. 

தினமணி

மதுரை கள்ளழகர் கோயிலில் வரும் 18-ம் தேதி பங்குனி மாத திருக்கல்யாணம் தொடங்குகிறது. 

108 வைணவ தலங்களில் ஒன்றாகக் கருதப்படும் கள்ளழகர் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் திருக்கல்யாண வைபவம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. 

இந்த விழாவானது வருகிற 18-ம் தேதி காலை 9.45 மணி அளவில் தொடங்குகிறது. அன்றைய தினம் மாலை 6 மணிக்கு திருக்கல்யாண மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூமிதேவியருடன் கள்ளழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். 

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாகத் திருக்கல்யாண வைபவம் வருகிற 21-ம் தேதி திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெறுகிறது. அன்று காலை 11.15 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் மிதுன லக்னத்தில் விழா நடைபெறுகிறது. 

22-ம் தேதி மஞ்சள் நீர் சாற்றுமுறையுடன் இந்த திருவிழா நிறைவுபெறுகிறது. திருக்கல்யாண திருவிழாவைக் காண ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: மேற்கு வங்கத்தில் மேலும் இருவா் தற்கொலை

பா்கூா் மலையில் மஞ்சள் தோட்டத்துக்குள் கஞ்சா செடிகள் வளா்த்த விவசாயி கைது

SCROLL FOR NEXT