முகப்பு
செய்திகள்

பொன் நிறமாக மாறிய செங்கம் ரிஷபேஸ்வரர் கோயில் நந்தி!

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் அமைந்துள்ள ஸ்ரீஅனுபாம்பிகை சமேத ஸ்ரீரிஷபேஸ்வரர் கோயில் நந்தி மீது ஞாயிற்றுக்கிழமை மாலையில் சூரிய ஒளி நேரடியாக விழுந்ததால், நந்தி பொன் நிறமாக காட்சியளித்தது.

Updated On : 18 மார்ச் 2019, 4:00 am IST
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் அமைந்துள்ள ஸ்ரீஅனுபாம்பிகை சமேத ஸ்ரீரிஷபேஸ்வரர் கோயில் நந்தி மீது ஞாயிற்றுக்கிழமை மாலையில் சூரிய ஒளி நேரடியாக விழுந்ததால், நந்தி பொன் நிறமாக காட்சியளித்தது.
 செங்கத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழைமைவாழ்ந்த ஸ்ரீஅனுபாம்பிகை சமேத ஸ்ரீரிஷபேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் கோபுரத்தின் மீது ஒவ்வோர் ஆண்டும் பங்குனி மாதம் 3-ஆம் தேதி மாலையில் சூரிய ஒளி பட்டு, பின்னர் சிறிது நேரத்தில் நந்தி மீது சில நிமிடங்கள் மட்டும் நேரடியாக விழுவது வழக்கம்.
 அதேபோல, நிகழாண்டு ஞாயிற்றுக்கிழமை மாலையில் சூரிய ஒளி நந்தி மீது நேரடியாக விழுந்ததால், நந்தி பொன் நிறத்தில் காட்சியளித்தது. அப்போது, நந்திக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
 இந்தக் காட்சியைப் பார்வையிடவும், நந்தியை வழிபடவும் கோயிலில் குவிந்திருந்த செங்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள், சூரிய ஒளி விழுந்தவுடன் நந்தி பகவானை வழிபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.