செய்திகள்

துலா லக்னமா நீங்கள்? உங்களுக்கு சந்திர திசை நடந்தால் உண்டாகும் பலன்கள்!

துலாம் லக்னத்தின் அதிபதி சுக்கிர பகவான் ஆவார். சுக்கிர பகவானுடன் சந்திரன் சமம் என்ற நிலையிலிருந்து

தினமணி


துலாம் லக்னத்தின் அதிபதி சுக்கிர பகவான் ஆவார். சுக்கிர பகவானுடன் சந்திரன் சமம் என்ற நிலையிலிருந்து செய்யும் சுப மற்றும் அசுப பலன்களைக் காண்போம்.

எதிர்காலம் தொடர்பான பணிகளை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். அறப்பணிகளை செய்வதற்கான சூழல் உண்டாகும். 

வாழ்க்கை பற்றிய புரிதல் உருவாகும். சுயதொழில் சார்ந்த எண்ணங்கள் மேம்படும். ஆன்மீகம் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபாடு அதிகரிக்கும். மனதில் நினைத்த காரியங்கள் எண்ணிய பலனை அளிக்கும். மற்றவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் சாதகமான நிலையை உருவாக்கும். 

மனதிற்கு விரும்பிய உடை மற்றும் ஆபரணச்சேர்க்கை உண்டாகும். உலகியல் சார்ந்த நடவடிக்கைகளில் சில மாற்றங்கள் மனதில் எழும். அரசு தொடர்பான காரியங்களில் ஆதாயம் உண்டாகும். 

பரிகாரம்

அவரவர் ஜாதகத்தில் சந்திரன் பலம் குறைவாக இருக்கும் பட்சத்தில் திங்கட்கிழமைதோறும், சந்திர ஓரையில் சாந்த சொரூபமாக உள்ள பார்வதிதேவியை வழிபட்டு வர மேன்மை உண்டாகும். மேலும், ஜென்ம ஜாதகத்தில் சுபர்கள் மற்றும் அசுபர்களின் பார்வை இருக்கும் பட்சத்தில் சுப மற்றும் அசுப பலன்கள் மாறுபட்டு நடைபெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்: மாவட்ட ஆட்சியா் தகவல்

லக்ஷயா ஏமாற்றம்; சாத்விக்/சிராக் ஏற்றம்

31-ஆவது நாளாக போக்குவரத்து ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

இறுதிச்சுற்றில் நீரஜ் சோப்ரா, சச்சின் யாதவ்

வெண்கலப் பதக்கச் சுற்றில் அன்டிம் பங்கால்

SCROLL FOR NEXT