செய்திகள்

ஒசூர் ஸ்ரீசந்திரசூடேஸ்வரர் கோயிலில் இன்று தேர்த் திருவிழா

தினமணி

கிருஷ்ணகிரி மாவட்டம்,  ஒசூர் ஸ்ரீ சந்திரசூடேஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா இன்று நடைபெறுகிறது. 

இந்த விழாவில் ஒசூர் மட்டும் அல்லாது கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். 

தமிழக  - கர்நாடக மாநில எல்லையில் அமைந்துள்ளது ஒசூர்.  இதனால் கர்நாடக மாநில பக்தர்கள் நாள்தோறும் ஒசூர் சந்திரசூடேஸ்வரர் கோயிலுக்கு வந்து வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதே போல கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையில் ஆந்திர மாநிலம் அமைந்துள்ளதால்,  அங்குள்ள பக்தர்களும் ஒசூர் சந்திர சூடேஸ்வரர் கோயிலுக்கு வருகை தருகின்றனர்.

மூன்று மாநில பக்தர்கள் கூடும் தேர்த் திருவிழாவாக ஒசூர் சந்திரசூடேஸ்வரர் கோயில் திருவிழா அமைந்துள்ளது. இதையொட்டி வியாழக்கிழமை பல்லக்கு உற்வசம், வெள்ளிக்கிழமை தெப்பல் உற்சவம், நடைபெறுகிறது. 

இந்தத் தேர்த் திருவிழாவை முன்னிட்டு ஒசூரில் வீதிதோறும் நீர்மோர், அன்னதானம் வழங்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

SCROLL FOR NEXT