செய்திகள்

காமாட்சியம்மன் கோயிலில் சண்டி ஹோமம்: ஸ்ரீ விஜயேந்திரர் பங்கேற்பு

DIN


காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திரர் தலைமையில் புதன்கிழமை சண்டி ஹோமம் நடைபெற்றது.
காஞ்சி காமகோடி பீடத்தின் 69-ஆவது பீடாதிபதியான ஜயேந்திரர் கடந்தாண்டு சித்தியடைந்தார். 
இவரது, அதிஷ்டானத்தில் தற்போது ஆராதனை மகோற்சவம் விமரிசையாக நடத்தப்பட்டது. இந்நிலையில், வட இந்தியாவிலிருந்து ஆராதனை உற்சவத்துக்கு வருகை புரிந்த மடாதிபதிகள், சங்கர மடத்தில் பாராயணமும், காமாட்சியம்மன் கோயிலில் ஹோமம் உள்ளிட்டவற்றையும் நடத்தி வந்தனர். 
இதன் நிறைவு உற்சவமானது, பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திரர் தலைமையில் காமாட்சியம்மன் கோயில் வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில், சண்டி ஹோமம், ருத்ர யாகம் ஆகியவை நடத்தப்பட்டன. நிகழ்ச்சியில், பீடாதிபதிகளான பெஜாவர் மடம் விஸ்வேச தீர்த்த சுவாமிகள், எதநீர் மடம் கேஷவானந்த பாரதி சுவாமிகள், சங்கேஸ்வர் மடம் சச்சிதானந்த வித்ய நிருஷிம்ம பாரதி சுவாமிகள், கரவீரா மடம் வித்யசங்கர பாரதி சுவாமிகள், புஷ்பகிரி மடம் வித்யசங்கரா பாரதி சுவாமிகள், கோவிந்த தேவ் கிரிஜி மஹாராஜ், காமாட்சியம்மன் கோயில் நிர்வாகிகள், பக்தர்கள் திரளானோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மறுவெளியீட்டில் அசத்தும் கில்லி: அஜித்தின் 3 படங்கள் இணைந்தும் குறைவான வசூல்!

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

அதே அரண்மனை! நம்பர் மட்டும் வேறு! : அரண்மனை - 4 திரைவிமர்சனம்!

அதிக விக்கெட்டுகள்: தமிழக வீரர் நடராஜன் முதலிடம்!

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

SCROLL FOR NEXT