செய்திகள்

சென்னகேசவப் பெருமாள் கோயிலில் மே 8-ல் வைகாசி தேர்த் திருவிழா கொடியேற்றம்

தினமணி

சங்ககிரி அருள்மிகு சென்னகேசவப் பெருமாள் சித்திரைத் தேர்த் திருவிழா நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம், சங்ககிரியில் ஞாயிறன்று நடைபெற்றது. 

தேர்தல் நடத்தை விதிமுறைகளையொட்டி சித்திரைத் தேர்த் திருவிழாவை வைகாசி மாதங்களுக்கு மாற்றம் செய்வது என முடிவு செய்யப்பட்டது.

திருவிழா மே 8-ஆம் தேதி கொடியேற்றத்துடன் சுவாமி மலையிலிருந்து நகருக்கு எழுந்தருளதலும், அதையடுத்து மே 9-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை சுவாமி பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வருதலும், மே 16 ஆம் தேதி சென்னகேசவப்பெருமாள், உடனமர் ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி ஆகிய சுவாமிகள் எழுந்தருளி திருத்தேர் வடம் பிடித்தலும், மே 27-ஆம் தேதி சுவாமிமலையேற்றம் வைபவமும் நடைபெற உள்ளன.

மலையிலிருந்து சுவாமி நகருக்கு எழுந்தருளி மலையேற்றம் வரை மலையடிவாரத்தில்  உள்ள தங்கு மண்டபத்தில் அருள்மிகு சென்னகேசவப் பெருமாள் உடனமர் ஸ்ரீதேவி, ஸ்ரீ பூதேவி உற்சவ மூர்த்திகளுக்கு நண்பகல் 12 மணிக்கும், இரவு 7 மணிக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முகமது சிராஜுக்கு சுனில் கவாஸ்கர் புகழாரம்!

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

SCROLL FOR NEXT