செய்திகள்

மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில் நாளை 1,008 கலச பூஜை

தினமணி

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - ஸ்ரீ குருவாயூரப்பன் கோயிலில் வெள்ளிக்கிழமை சபரிமலை தந்திரி பிரம்மஸ்ரீ மகேஷ் மோகனரு தலைமையில் 1,008 சகஸ்ர கலச பூஜை நடைபெறுகிறது.

8-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 4.45 மணிக்கு மஹாகணபதி ஹோமமும், 6.30 மணிக்கு கலச பூஜையும், மாலை 6 மணிக்கு சகஸ்ரகலா (1,008) பூஜையும் தொடங்குகின்றன. தொடா்ந்து 9- ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 4.45 மணிக்கு மஹா கணபதி ஹோமமும், 8.30 மணியளவில் ஸ்ரீ ஐயப்பனுக்கு சகஸ்ர (1,008) கலசங்களில் பூஜிக்கப்பட்ட புனித நீரால் அபிஷேகம் நடைபெறுகின்றன.

ஸ்ரீ குருவாயூரப்பனுக்கு மாலை 5.30 மணிக்கு சகஸ்ர (1,008) கலச பூஜையும், 10-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை மஹா கணபதி ஹோமமும் நடைபெறுகின்றன. 8.30 மணியளவில் ஸ்ரீ குருவாயூரப்பனுக்கு சகஸ்ர (1,008) கலசங்களில் பூஜிக்கப்பட்ட புனித நீரால் அபிஷேகம் செய்யப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT