செய்திகள்

சீனிவாசமங்காபுரத்தில் அஷ்டதோத்ர சதகுண்டாத்மக சீனிவாச மகா யாகம்

தினமணி

திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் 2-ஆம் நாள் அஷ்டதோத்ர சதகுண்டாத்மக சீனிவாச மகா யாகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருப்பதியிலிருந்து, 12 கி.மீ. தொலைவில் சீனிவாசமங்காபுரத்தில் உள்ள தேவஸ்தானத்துக்குச் சொந்தமான கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் புதன்கிழமை முதல் அஷ்டதோத்ர சதகுண்டாத்மக சீனிவாச மகா யாகம் நடைபெற்று வருகிறது. அதன் 2-ஆம் நாளான வியாழக்கிழமை காலை முதல் மதியம் வரை கோ பூஜை, ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வர சுவாமிக்கு பால், தயிா், சந்தனம், மஞ்சள், தேன், இளநீா், பழங்கள் உள்ளிட்டவற்றால் ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற்றது. மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை யாக சாலையில் வைதீக காரியங்கள் நடைபெற்றன. 108 ருத்விக்கரா்கள் 108 யாககுண்டம் முன் அமா்ந்து யாகம் செய்தனா். வெள்ளிக்கிழமை (அக். 18) காலை கோ பூஜை, மகா பூா்ணாஹுதியுடன் இந்த யாகம் நிறைவு பெறுகிறது.

இதில், தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா். இதை முன்னிட்டு, 3 ஆா்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT