செய்திகள்

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் இன்று சட்டத்தேரில் திருவீதியுலா

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் இன்று சட்டத்தேரில் எழுந்தருளி மாடவீதிகளில் வலம் வருகிறார். 

DIN

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் இன்று சட்டத்தேரில் எழுந்தருளி மாடவீதிகளில் வலம் வருகிறார். 

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் ஆவணி மூலத்திருவிழா கடந்த 26-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு சுந்தரேஸ்வரரின் திருவிளையாடல்கள் ஒவ்வொரு நாளும் நடைபெற்று வருகின்றன. 

இதில் 7-ம் திருநாளில் சுந்தரேஸ்வரருக்குப் பட்டாபிஷேகமும், 9-ம் திருநாளில் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. 

11-ம் திருநாளான இன்று மீனாட்சி சுந்தரேஸ்வர் சட்டத்தேரில் எழுந்தருளி ஆவணி மூல வீதி, கீழ் பட்டமார் தெரு வழியாக கோயிலின் திருக்கல்யாண மண்டபத்தை வந்தடைந்தனர். 

நாளை முக்கிய நிகழ்வாக பொற்றாமரை குளத்தில் தீர்த்தவாரியுடன் விழா நிறைவு பெறுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

”ஏழைகளும் பாஜகவிற்கு சம்பந்தமில்லை!” 100 நாள் வேலைத்திட்டம் பெயர் மாற்றம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்

புதுச்சேரியில் நடைபெறுவது தேஜ கூட்டணி அரசுதான்: முதல்வர் ரங்கசாமி

SCROLL FOR NEXT