செய்திகள்

திருப்பதி: தேவி நவராத்திரி விழா சுவரொட்டி வெளியீடு

தினமணி


திருப்பதியில் உள்ள கபிலேஸ்வரர் கோயிலில் நடைபெறவுள்ள தேவி நவராத்திரி விழாவுக்கான சுவரொட்டிகளை தேவஸ்தான அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை வெளியிட்டனர். 
திருப்பதியில் உள்ள தேவஸ்தானத்துக்குச் சொந்தமான கபிலேஸ்வர சுவாமி கோயிலில் வரும் செப். 29-ஆம் தேதி முதல் அக். 8-ஆம் தேதி வரை தேவி நவராத்திரி விழா நடைபெற உள்ளது. அதற்கான சுவரொட்டியை திருப்பதியில் உள்ள தேவஸ்தான தலைமை அலுவலகத்தில்  செயல் இணை அதிகாரி பசந்த்குமார் செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.
நவராத்திரி உற்சவம் கலச ஸ்தாபனத்துடன் 29-ஆம் தேதி தொடங்கி அக். 8-ஆம் தேதி கலசாபிஷேகம், பார்வேட்டு உற்சவத்துடன் நிறைவு பெற உள்ளது. செப். 30-ஆம் தேதி முதல் அக். 7-ஆம் தேதி வரை தினமும் காலை ஸ்நபன திருமஞ்சனம், மாலை ஊஞ்சல் சேவை நடைபெற உள்ளது. அதில், காமாட்சி அன்னை தினமும் ஒரு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளார்.
நவராத்திரி அம்மன் அலங்காரங்கள்:
செப். 30    காமாட்சி அம்மன்
அக். 1     ஆதிபராசக்தி
அக். 2    அன்னபூரணி
அக். 3    மாவடி சேவை
அக். 4    லட்சுமி தேவி
அக். 5    துர்கா தேவி
அக். 6    சரஸ்வதி தேவி
அக். 7    மகிஷாசுரமர்த்தினி
அக். 8    சிவபார்வதி தரிசனம்,   பார்வேட்டு உற்சவம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோட் நாயகி மீனாட்சி சவுத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

SCROLL FOR NEXT