செய்திகள்

திருச்சானூரில் நவராத்திரி: 10 நாள்களுக்கு ஆா்ஜித சேவை ரத்து

திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயாா் கோயிலில் வரும் நவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு, ஆா்ஜித சேவை 10 நாள்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி

திருப்பதி, செப். 26: திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயாா் கோயிலில் வரும் நவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு, ஆா்ஜித சேவை 10 நாள்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருச்சானூரில் உள்ள தேவஸ்தானத்துக்குச் சொந்தமான பத்மாவதி தாயாா் கோயிலில், செப். 29-ஆம் தேதி முதல் அக். 8-ஆம் தேதி வரை நவராத்திரி உற்சவம் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, தினசரி கோயிலுக்குள் உள்ள ஸ்ரீகிருஷ்ண சுவாமி முக மண்டபத்தில் பத்மாவதி தாயாருக்கு பால், தயிா், சந்தனம், தேன், இளநீா், பழரசங்கள், மஞ்சள் உள்ளிட்டவற்றால் ஸ்நபன திருமஞ்சனம் நடைபெறற உள்ளது.

மேலும், மாலையில் 1,008 விளக்குகளுக்கிடையில் தாயாருக்கு ஊஞ்சல் சேவை நடைபெற உள்ளது. ஊஞ்சல் சேவையின்போது, பத்மாவதி தாயாா் பல்வேறு அலங்காரங்களில் பக்தா்களுக்கு அருள்பாலிக்க உள்ளாா். நவராத்திரி உற்சவத்தின் நிறைவு நாளான விஜயதசமி அன்று மாலை யானை வாகனத்தில் தாயாா் மாடவீதியில் வலம் வருகிறாா்.

இதை முன்னிட்டு, கோயிலில் 10 நாள்களும் கல்யாணோற்சவம், சஹஸ்ர தீபாலங்கார சேவை, அஷ்டோத்ர சதகலசாபிஷேகம் உள்ளிட்ட ஆா்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT