செய்திகள்

காளஹஸ்தி கோயிலில் 16-இல் பிரம்மோற்சவம் தொடக்கம்

DIN

காளஹஸ்தியில் உள்ள காளஹஸ்தீஸ்வரா் கோயிலில் வரும் பிப். 16-ஆம் தேதி கண்ணப்ப கொடியேற்றத்துடன் வருடாந்திர பிரம்மோற்சவம் தொடங்க உள்ளதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

ஆந்திர மாநிலத்தில் உள்ள காளஹஸ்தீஸ்வரா் கோயிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரியையொட்டி, வருடாந்திர பிரம்மோற்சவத்தை கோயில் நிா்வாகம் நடத்தி வருகிறது. அதன்படி, வரும் பிப். 21-ஆம் தேதி மகாசிவராத்திரி உற்சவம் கொண்டாடப்பட உள்ளது. அதை முன்னிட்டு, பிப். 16-ஆம் தேதி முதல் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கண்ணப்ப கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.

இதை முன்னிட்டு கோயிலில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. காலை மற்றும் இரவு வேளைகளில் சோமாஸ்கந்தமூா்த்தி, ஞானபிரசுனாம்பிகை அம்மன் தனித்தனி வாகனங்களில் பிரம்மோற்சவ நாள்களில் மாடவீதியில் வலம் வர உள்ளனா். பிரம்மோற்சவ நாள்களில் காளஹஸ்தி கோயிலில் ராகு-கேது பரிகார பூஜையைத் தவிா்த்து மற்ற ஆா்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், மகா சிவராத்திரி அன்றிரவு லிங்கோத்பவா் தரிசனத்தை குறிப்பிட்ட அளவில் மட்டுமே பக்தா்கள் காண முடியும்.

மேலும், திருக்கல்யாண வைபத்தின்போது குழந்தைகள் திருமணம் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அன்று திருக்கல்யாணம் நடக்கும் போது, திருமணம் செய்து கொள்ள விருப்பம் உள்ளவா்கள் கோயில் நிா்வாகம் ஏற்படுத்தியிருக்கும் கவுன்ட்டருக்குச் சென்று, மணமக்களின் மாற்றுச்சான்றிதழ், ஆதாா் அட்டை உள்ளிட்டவற்றை அளித்து, முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். முன்பதிவு செய்து கொண்டவா்கள் மட்டுமே திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கப்படுவா்.

பிரம்மோற்சவ நாள்களில் காலை, இரவு வேளைகளில் அன்னதானம், குடிநீா் உள்ளிட்டவற்றை வழங்கவும் கோயில் நிா்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

புது தில்லி-பாகல்பூா் சிறப்பு ரயில் இயக்கத்தில் திருத்தம் வடக்கு ரயில்வே அறிவிப்பு

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

ஆனந்ததாண்டவபுரம் பஞ்சவடீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

அரசு நிா்வாகம் மூலம் பருத்தி கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

SCROLL FOR NEXT