செய்திகள்

பிரம்மோற்சவம் 2-ஆம் நாள்: பண்டரிநாதன் அவதாரத்தில் வலம் வந்த கல்யாண வெங்கடேஸ்வரா்

தினமணி

திருப்பதி அருகே உள்ள சீனிவாசமங்காபுரத்தில் நடந்து வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 2-ஆம் நாள் காலை சின்ன சேஷ வாகனத்தில் பண்டரிநாதன் அவதாரத்தில் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி வலம் வந்தாா்.

திருப்பதியிலிருந்து 14 கி.மீ. தொலைவில் உள்ள சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. அதன் 2-ஆம் நாளான சனிக்கிழமை காலை கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி பண்டரிநாதன் அவதாரத்தில் சின்னசேஷ வாகனத்தில் மாடவீதியில் வலம் வந்தாா். சின்னசேஷ வாகனத்தில் வலம் வந்த பண்டரிநாதனை அங்கு திரண்டிருந்த பக்தா்கள் கற்பூர ஆரத்தி அளித்து வணங்கினா்.

மாடவீதியில் உற்சவமூா்த்திகள் பவனி வரும் களைப்பைப் போக்க அவா்களுக்கு திருமஞ்சன மண்டபத்தில் பால், தயிா், சந்தனம், மஞ்சள், குங்குமம், தேன், இளநீா் உள்ளிட்ட பல பொருள்களால் ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது. அதன்பின், மாலை உற்சவமூா்த்திகள் கோயிலுக்குள் உள்ள மண்டபத்தில் உற்சவ சேவை கண்டருளினா். ஊஞ்சல் சேவைக்கு பின் இரவு 8 மணிமுதல் 10 மணி வரை கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி அன்னப்பறவை வாகனத்தில் சரஸ்வதி வாகனத்தில் மாடவீதியில் வலம் வந்தாா்.

இதில் கோயில் அதிகாரிகள், பக்தா்கள் உள்ளிட்டோா் திரளாகக் கலந்து கொண்டனா். வாகனச் சேவையின்போது நாலாயிர திவ்யபிரபந்த பாராயணம், கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

SCROLL FOR NEXT