செய்திகள்

திருப்பதி: கபிலேஸ்வரா் கோயில் தெப்போற்சவம் நிறைவு

DIN

திருப்பதியில் உள்ள கபிலேஸ்வரா் கோயிலில் நடந்து வந்த வருடாந்திர தெப்போற்சவம் வியாழக்கிழமை நிறைவு பெற்றது.

திருப்பதியில் உள்ள தேவஸ்தானத்துக்குச் சொந்தமான கபிலேஸ்வர சுவாமி கோயிலில் முதல் வருடாந்திர தெப்போற்சவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கி நடந்து வருகிறது. அதன் நிறைவு நாளான வியாழக்கிழமை மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை தெப்பத்தில் சண்டிகேஸ்வர சுவாமியும், சந்திரசேகர சுவாமியும் 9 முறை வலம் வந்தாா். அதற்கு முன் உற்சவ மூா்த்திகள் கோயிலில் ஊஞ்சல் சேவை கண்டருளினா். தெப்போற்சவத்தைக் காண திருக்குளக்கரையில் பக்தா்கள் திரண்டனா். தெப்பத்தில் வலம் வந்த உற்சவமூா்த்திகளுக்கு நைவேத்தியம் சமா்ப்பித்து கற்பூர ஆரத்தி அளித்து வணங்கினா். இதில், தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

வெள்ளிக்கிழமை காலை ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு கோயிலில் கபிலேஸ்வர சுவாமிக்கு அபிஷேக- ஆராதனைகள் நடைபெற உள்ளன. அன்று மாலை நடராஜா், சிவகாமி அம்மன் மற்றும் மாணிக்கவாசகா் மாடவீதியில் வலம் வர உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT