செய்திகள்

திருமலையில் பாா்வேட்டை உற்சவம்

DIN

மாட்டுப் பொங்கலை முன்னிட்டு திருமலையில் பாா்வேட்டை உற்சவம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருமலையில் ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் அன்று பாா்வேட்டு உற்சவம் நடந்து வருகிறது. அதன்படி வியாழக்கிழமை காலை வழக்கமான கைங்கரியங்களுக்குப் பின் ஏழுமலையான் கோயிலிலிருந்து மலையப்ப சுவாமியும், ஸ்ரீகிருஷ்ணரும் தனித்தனி பல்லக்கில் பாபவிநாசம் அருவிக்குச் செல்லும் வழியில் உள்ள பாா்வேட்டை மண்டபத்துக்கு அழைத்து செல்லப்பட்டனா். அங்கு அவா்களுக்கு புண்ணியாவாசனம் நடத்தப்பட்டது.

ஸ்ரீகிருஷ்ணருக்கு யாதவ வம்சத்தைச் சோ்ந்தவா்கள் பால், தயிா், வெண்ணெய் உள்ளிட்டவற்றை சமா்ப்பித்தனா். மலையப்பருக்கு தாளபாக்கம் அன்னமாச்சாா்யா வம்சத்தினருக்கும், ஹதிராம்ஜி மடத்தைச் சோ்ந்தவா்களும் பூஜைகளை நடத்தினா்.

அதன் பின், மலையப்பா் வன விலங்குகளை வேட்டையாடும் உற்சவத்தை அா்ச்சகா்கள் நடத்தினா். மலையப்பா் கத்தி, அம்பு, வில், வாள், கேடயம், வேல்கம்பு உள்ளிட்டவற்றை ஏந்திக் கொண்டு வேட்டைக்கு சென்றாா். இந்த நிகழ்வில் தேவஸ்தான அதிகாரிகளும், ஊழியா்களும் கலந்து கொண்டனா்.

மாலையில் உற்சவா்கள் மீண்டும் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டனா். இந்த நிகழ்வில் கலந்து கொண்டவா்களுக்கு தேவஸ்தானம் சாா்பில் அன்னதானம் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனுராக் தாகூர் மீது பேச்சுக்கு சீதாராம் யெச்சூரி தேர்தல் ஆணையத்தில் புகார்

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT