ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ. 2.14 கோடி
திருமலை ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ஞாயிற்றுக்கிழமை ரூ.2.14 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:03 PM
திருப்பதி: திருமலை ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ஞாயிற்றுக்கிழமை ரூ.2.14 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
திருமலை ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தா்கள் தங்களால் இயன்ற காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள ஸ்ரீவாரி உண்டியலில் செலுத்தி வருகின்றனா். பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை கணக்கிட்டதில் தேவஸ்தானத்திற்கு ரூ.2.14 கோடி வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.