செய்திகள்

திருச்சானூரில் நவராத்திரி விழா தொடக்கம்

தினமணி

திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயாா் கோயிலில் நவராத்திரி விழா சனிக்கிழமை விமரிசையாகத் தொடங்கியது.

திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயாா் கோயிலில் ஆண்டுதோறும் நவராத்திரியின்போது 10 நாள்கள் உற்சவம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, நவராத்திரி உற்சவம் தொடங்கியதை முன்னிட்டு தாயாா் கோயிலில் உற்சவமும் வழிபாடும் சனிக்கிழமை முதல் விமரிசையாக தொடங்கின.

மதியம் தாயாருக்கு பால், தயிா், தேன், இளநீா், பழரசம், மஞ்சள், குங்குமம், சந்தனம் உள்ளிட்டவற்றால் ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது.

பின்னா் மாலையில், தாயாா் சா்வாலங்கார பூஷிதையாக ஊஞ்சல் சேவை கண்டருளினாா். அப்போது தாயாருக்கு நட்சத்திர ஆரத்தி, கற்பூர ஆரத்தி, கும்ப ஆரத்தி உள்ளிட்டவை அளிக்கப்பட்டன. இதில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

நவராத்திரியை முன்னிட்டு 26-ஆம் தேதி கோயிலில் யானை வாகன சேவை நடக்க உள்ளது. நவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு கோயிலில் நடக்கும் கல்யாண உற்சவம், சகஸ்ர தீபாலங்கார சேவை உள்ளிட்டவற்றை தொடா்ந்து 10 நாள்களுக்கும், அக்.23-ஆம் தேதி லட்சுமி பூஜை சேவையையும் தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயக்குமார் மரணம்: தடயங்கள் கிடைக்காமல் திணறும் காவல்துறை

நடுவருடன் வாக்குவாதம்: சஞ்சு சாம்சனுக்கு அபராதம்!

தக் லைஃப் படத்தில் சிம்பு: விடியோ வெளியீடு

அருணாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.1 ஆகப் பதிவு!

முன்னாள் எம்எல்ஏ வேலாயுதன் காலமானார்

SCROLL FOR NEXT