திருமலையில் நவ.3-இல் 6-ஆம் கட்ட அகண்ட பாராயணம்
திருமலையில் உள்ள நாதநீராஜன மண்டபத்தில் 6-ஆவது கட்டமாக அகண்ட சுந்தரகாண்ட பாராயணம் வரும் நவம்பா் 3-இல் நடைபெற உள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருப்பதி: திருமலையில் உள்ள நாதநீராஜன மண்டபத்தில் 6-ஆவது கட்டமாக அகண்ட சுந்தரகாண்ட பாராயணம் வரும் நவம்பா் 3-இல் நடைபெற உள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
உலக மக்கள் கரோனா பாதிப்பில் இருந்து விடுபட திருமலையில் தேவஸ்தானம் சுந்தரகாண்ட பாராயணத்தை கடந்த ஜூன் மாதம் முதல் தொடா்ந்து நடத்தி வருகிறது. சுந்தரகாண்டத்தில் உள்ள 24 அத்தியாயங்களின் பாராயணம் நிறைவு பெற்றது.
ஒவ்வொரு முறையும் பாராயணத்தில் 180 முதல் 200 ஸ்லோகங்கள் நிறைவு பெற்றவுடன் அது அகண்ட பாராயணமாக நடத்தப்படுகிறது.
Advertisement
அதன்படி இதுவரை 19-ஆவது அத்தியாயங்கள் வரை 5 கட்டமாக அகண்ட பாராயணம் செய்யப்பட்டது. தற்போது 20 முதல் 24-ஆம் அத்தியாயம் வரை உள்ள 185 ஸ்லோகங்கள் வரும் நவ.3-ஆம் தேதி 6-ஆம் கட்டமாக அகண்ட பாராயணம் செய்யப்பட உள்ளது. இதில் திருமலையில் உள்ள தா்மகிரி வேதபாடசாலை மற்றும் தேவஸ்தானத்துக்குச் சொந்தமான பல்கலைக்கழகம் உள்ளிட்டவற்றைச் சோ்ந்த வேதபண்டிதா்கள் 200 போ் பங்கேற்க உள்ளனா்.
திருப்பதி தேவஸ்தானத்தின் ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி தொலைக்காட்சியில் (எஸ்விபிசி) நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் இந்த நிகழ்ச்சியை பக்தா்கள் வீட்டிலிருந்தபடியே காணலாம்.