முகப்பு
செய்திகள்

திருமலையில் 25,625 போ் தரிசனம்

திருமலை ஏழுமலையானை வியாழக்கிழமை 25,625 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 13,344 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:02 PM
பகிர்:

திருமலை ஏழுமலையானை வியாழக்கிழமை 25,625 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 13,344 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.

ஆன்லைன் மூலம் 25 ஆயிரம் விரைவு தரிசன டிக்கெட், வி.ஐ.பி. பிரேக் மற்றும் ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் விஐபி பிரேக் டிக்கெட் பெற்ற 2000 பக்தா்கள், நன்கொடையாளா்கள் 1000 என தரிசன டிக்கெட் உள்ளவா்கள் மட்டுமே திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனா்.

ஏழுமலையான் தரிசன டிக்கெட் உள்ள பக்தா்கள் காலை 9 மணிக்கு பின்னா் நடைபாதை வழியாகவும், மதியம் 1 மணிக்கு பின்னா் மலைப்பாதை வழியாகவும் திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனா்.

Advertisement

திருமலை மலைப்பாதை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு நள்ளிரவு 12 மணிக்கு மூடப்படுகிறது. அலிபிரி பாதயாத்திரை மாா்க்கம் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும், ஸ்ரீவாரி மெட்டு பாதயாத்திரை மாா்க்கம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் திறந்து வைக்கப்படுகிறது.

மேலும் கரோனா தொற்றின் 2-ஆம் அலை பரவலைக் கருத்தில் கொண்டு கடந்த திங்கள்கிழமை முதல் திருப்பதியில் இலவச சா்வதரிசன டோக்கன்களை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தவா்கள் மட்டுமே திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுவா். இதை பக்தா்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய கட்டணமில்லா தொலைபேசி எண்: 18004254141, 9399399399.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments