முகப்பு
உலகம்

தவறாகிப் போன காப்பி-பேஸ்ட்! யார் எழுதிக் கொடுத்ததை பதிவு செய்கிறார் பாகிஸ்தான் பிரதமர்?

எக்ஸ் பதிவில், தவறாகிப் போன காப்பி-பேஸ்ட் வேலை, யார் எழுதிக் கொடுத்ததை பதிவு செய்கிறார் பாகிஸ்தான் பிரதமர் என்ற கேள்வி எழுவது பற்றி..

Updated On : 8 ஏப்ரல், 2026 at 6:49 AM
பாகிஸ்தான் பிரதமர் - ANI
பகிர்:

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப், தன்னுடைய அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் செய்த சிறு பிழை, ஈரான் - அமெரிக்கப் போர்ப் பதற்றத்தைத் தணிக்க அவர் எடுத்து வரும் முயற்சிகள் மீதான சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு, அவர் கோரிக்கை வைக்கும் விதத்தில் ஒரு எக்ஸ் பதிவை அவர் இன்று வெளியிட்டிருந்தார். ஆனால், அதில், டிராஃப்ட் என்ற வார்த்தையும், பாகிஸ்தான் பிரதமரின் எக்ஸ் பதிவு என்றும் தவறுதலாக பேஸ்ட் ஆகியிருந்தது.

எனவே, இந்த பதிவு, பாகிஸ்தான் பிரதமரால் எழுதப்பட்டது அல்ல, அவருக்கு யாரோ எழுதிக்கொடுத்து, அதனைத்தான் அவர் பதிவிட்டு வருகிறார் என்ற சந்தேகத்தை வலுவாக்கியிருக்கிறது

Advertisement

ஈரான் மீதான தாக்குதலுக்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று ஷெபாஸ் கோரிக்கை விடும் வகையில் அந்த பதிவு இருக்கிறது. ஆனால், அதன் எடிட் ஹிஸ்டரியில் சென்று பார்த்தால், அதன் முதல் வாக்கியமாக டிராஃப்ட் என்பது இடம்பெற்றிருக்கிறது.

யார் ஒருவரும், தன்னுடைய கருத்தைப் பதிவிடும்போது, இந்நாட்டின் பிரதமர் என்று தொடங்கி எழுதுவது வழக்கமல்ல. ஆனால், ஒருவர் மற்றொருவருக்கு எழுதிக் கொடுக்கும்போது, அவ்வாறு எழுதிக் கொடுப்பார்கள். ஆனால், தவறு எங்கே நேர்ந்தது என்றால், அதனை அப்படியே காப்பி பேஸ்ட் செய்தபோதுதான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments