முகப்பு
இந்தியா

கரப்பான் பூச்சிகள் செத்து மடியாது! - முடக்கத்துக்குப் பின் புதிய எக்ஸ் கணக்கு தொடக்கம்

செத்து மடியாத கரப்பான் பூச்சிகள் அடைமொழியுடன் ‘காக்ரோச் இஸ் பேக்’ பெயரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் புதிய எக்ஸ் கணக்கு...

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி | கரப்பான் பூச்சிகள் செத்து மடியாது - படம் - @abhijeet_dipke
பகிர்:

கரப்பான் பூச்சிகள் செத்து மடியாது என்ற அடைமொழியுடன் ‘காக்ரோச் இஸ் பேக்’ பெயரில் தற்போது எக்ஸ் டஹ்லத்தில் முடக்கப்பட்டுள்ள கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் புதிய கணக்கு அதே சமூக வலைதளத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (‘காக்ரோச் ஜன்தா பார்ட்டி’) என்ற பெயரில் தொடங்கப்பட்ட எக்ஸ் (ட்விட்டர்) கணக்கு முடக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே கரப்பான் பூச்சிகள் செத்து மடியாது என்ற அடைமொழியுடன் ‘காக்ரோச் இஸ் பேக்’ பெயரில் புதியதொரு எக்ஸ் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. இதன் உரிமையாளரும் அதே, ‘அபிஜீத் தீப்கே’ என்ற இளைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், அந்த எக்ஸ் கணக்கு தொடங்கப்பட்ட சில மணி நேரத்திலேயே, அதாவது, வியாழக்கிழமை(மே 21) மாலை 6 மணி நிலவரப்படி, அந்த கணக்கை எக்ஸ் தளத்தில் பின்தொடரும் கணக்குகளின் எண்ணிக்கை 40,000-த்தை நெருங்கிவிட்டது. அதன் தொடர்ச்சியாக, அந்த எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து இரவு 8 மணியளவில் 53,000-த்தைக் கடந்து விட்டது.

Advertisement

Advertisement

summary

The X account of Cockroach Janata Party, the satirical digital outfit that came up last week and took social media by storm, was withheld in India on Thursday. Soon after, came another handle -- 'Cockroach is Back' with the tagline 'Cockroaches Don't Die'.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.