அருப்புக்கோட்டையில் வியாழக்கிழமை நண்பகல்(உச்சிகால) வழிபாட்டில் அலங்காரத்தில் ஸ்ரீசீரடிசாய்பாபா. 
செய்திகள்

அருப்புக்கோட்டை ஸ்ரீசீரடி சாய்பாபா கோயிலில் சிறப்பு வழிபாடு, தியானம்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நேரு நகரையடுத்துள்ள ஸ்ரீசீரடி சாய்பாபா கோயிலில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடும், உலக நன்மை வேண்டி தியானமும் நடைபெற்றது.

DIN


அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நேரு நகரையடுத்துள்ள ஸ்ரீசீரடி சாய்பாபா கோயிலில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடும், உலக நன்மை வேண்டி தியானமும் நடைபெற்றது.

அருப்புக்கோட்டை நேருநகர் அருகே அருள்மிகு சீரடி சாய்பாபா கோயில் அமைந்துள்ளது. தமிழக அரசின் தற்போதைய ஊரடங்கு தளர்வு விதிமுறைகளின்படி, வியாழக்கிழமை கோயிலின் வழிபாட்டில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் ஆவணி மாத வியாழக்கிழமையை முன்னிட்டு அன்று நன்பகலில் சிறப்பு உச்சிகால வழிபாடு நடைபெற்றது. அப்போது, ஸ்ரீசீரடி சாய்பாபாவிற்கான சிறப்பு வழிபாட்டுப்பாடல்கள், ஒலிபெருக்கியில் இசைத்தபடி இருக்க,முன்னதாகவே சிறப்பு மலரலங்காரம் செய்யப்பட்ட பாபாவிற்கு பக்திப்பாடலுக்கேற்றபடி பஞ்சதீப ஆராதனையும், ஏகதீப ஆராதனையும் செய்யப்பட்டன.

பின்னர் கோயில் ஊழியர்கள் ஸ்ரீசீரடி சாய்பாபாவிற்கு வெண்சாமரம் வீசியபடி இருக்க, சிறப்பு பிரசாத அர்ப்பணிப்பாகிய நைவேத்திய நிகழ்ச்சி நடைபெற்றது. வழிபாடு முடிந்ததும், முழு அலங்காரத்தில் ஸ்ரீசீரடி சாய்பாபா அருள்பாலித்தார். 

அப்போது, இவ்வழிபாட்டில், பக்தர்களும் பங்கேற்று, தாங்கள் கொண்டுவந்த பழங்கள், இனிப்புகள், மலர்களை ஸ்ரீசீரடி சாய்பாபாவிற்கு பக்தியுடன் படைத்து, 3 நிமிட மெளன தியானத்தில் ஈடுபட்டு உலக நன்மை வேண்டி சிறப்பு சங்கல்ப வழிபாட்டிலும் ஈடுபட்டனர். வழிபாட்டையடுத்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கணவருடனான பிரிவு முடிவை கைவிட்ட சாய்னா நேவால்!

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

SCROLL FOR NEXT