செய்திகள்

ஸ்ரீரங்கத்தில் பகல்பத்து ஆறாம் நாள் உற்சவம்: ஆளுநர் ஆர்.என்.ரவி தரிசனம்

தினமணி

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுந்த ஏகாதசி விழா ஆறாம் திருநாளான வியாழக்கிழமை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தரிசனம் செய்தார்.

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோயிலில் நடைபெறும் வைகுந்த ஏகாதசி திருவிழாவில் பகல்பத்து நாளன்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான அலங்காரத்தில் எழுந்தருளும் நம்பெருமாளுக்கு வைரம்,  வைடூரியம், முத்து, பவளம் என பலவிதமான ஆபரணங்கள் அணிவிக்கப்படுகின்றன.  

வைகுந்த ஏகாதசி திருவிழாவின் முக்கிய நிகழ்வாகக் கருதப்படும் பரமபதவாசல் திறப்பன்று  கருவறையிலிருந்து பாண்டியன் கொண்டை, கிளி மாலை, ரத்தின அங்கியுடன் புறப்பட்டு சிம்மக்கதியில் வரும் நம்பெருமாளைத் தரிசிக்க திரளும் பக்தர்களே இதற்கு சாட்சியாகும்.

வைகுந்த ஏகாதசி பகல் பத்து ஆறாம் நாளான வியாழக்கிழமை அர்ச்சுன மண்டபத்தில் நீள் முடி கிரீடம் இரத்தின அபயஹஸ்தம், வைர அபயஹ்தம், வைர காப்பு  பவளமாலை, நெல்லிக்காய் மாலை, காசு மாலை, அடுக்கு பதக்கம் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் நம்பெருமாள்.

இன்றைய நிகழ்வில் பங்கேற்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எஸ்டேட் பகுதியில் ஏ.டி.எம். மையங்கள் வேலை செய்யாததால் தொழிலாளா்கள் பாதிப்பு

வாக்கு எண்ணும் மையத்தை சுற்றி 2 கி.மீ. சிவப்பு மண்டலமாக அறிவிப்பு

ஆட்சியா் அலுவலகத்தில் நாள்தோறும் நீா்மோா் வழங்க ஏற்பாடு

கோயில்களில் அறங்காவலா்களை நியமிக்க மேலும் 6 மாத அவகாசம் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி

கன்னியாகுமரியில் பொதிகை படகு சீரமைப்புப் பணி தொடக்கம்

SCROLL FOR NEXT