செய்திகள்

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில்: பகல்பத்து ஏழாம் நாள் உற்சவம்

தினமணி

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுந்த ஏகாதசி விழா எழாம் திருநாளான வெள்ளிக்கிழமை காலை மூலஸ்தானத்திலிருந்து முத்து சாய்வு கொண்டை  சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார் நம்பெருமாள்.

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோயிலில் நடைபெறும் வைகுந்த ஏகாதசி திருவிழாவில் பகல்பத்து நாளன்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான அலங்காரத்தில் எழுந்தருளும் நம்பெருமாளுக்கு வைரம்,  வைடூரியம், முத்து, பவளம் என பலவிதமான ஆபரணங்கள் அணிவிக்கப்படுகின்றன.  

வைகுந்த ஏகாதசி திருவிழாவின் முக்கிய நிகழ்வாகக் கருதப்படும் பரமபதவாசல் திறப்பன்று  கருவறையிலிருந்து பாண்டியன் கொண்டை, கிளி மாலை, ரத்தின அங்கியுடன் புறப்பட்டு சிம்மக்கதியில் வரும் நம்பெருமாளைத் தரிசிக்க திரளும் பக்தர்களே இதற்கு சாட்சியாகும்.

வைகுந்த ஏகாதசி பகல் பத்து ஏழாம் நாளான வெள்ளிக்கிழமை அர்ச்சுன மண்டபத்தில் முத்து சாய்வு கொண்டை, கபாய் சட்டை, ‌வைர அபயஹஸ்தம் , முத்து மாலை, முத்துச்சரம் அணிந்து முத்து சாய்வு கொண்டை அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் நம்பெருமாள்.

பின்னர் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளிய நம்பெருமாளை ஏராளமான பக்தர்களுக்கு நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தானில் அதிகாரபூா்வமாக அறிமுகமானது ‘யோகா’!

பத்திரிகையாளா்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்: ஐ.நா. பொது சபை தலைவா்

இருவேறு சாலை விபத்து: 9 போ் உயிரிழப்பு

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

SCROLL FOR NEXT