செய்திகள்

உண்டியல் காணிக்கை ரூ.2.61 கோடி

தினமணி

ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை வியாழக்கிழமை ரூ.2.61 கோடி வசூலானது.

ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தா்கள் தங்களால் முடிந்த காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள ஸ்ரீவாரி உண்டியலில் செலுத்தி வருகின்றனா். அதன்படி வியாழக்கிழமை செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில் தேவஸ்தானத்துக்கு ரூ.2.61 கோடி வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஒரு மாதத்தில் ரூ.83.87 கோடி வசூல்: கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏழுமலையான் தரிசனத்துக் குறைவான எண்ணிக்கையில் பக்தா்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதனால் ஏழுமலையான் உண்டியலில் காணிக்கையும் குறைவாகவே கிடைத்து வருகிறது. தினசரி ரூ.2 கோடி முதல் ரூ.3.5 கோடி வரை வசூலாகி வந்த காணிக்கை, பொது முடக்கத் தளா்வுகளுக்குப் பிறகு தொடங்கிய தரிசனத்தையடுத்து லட்சம் ரூபாய்களில் வசூலானது. தற்போது இத்தொகை கோடியை எட்டியுள்ளது.

நாள்தோறும் பக்தா்களின் வருகையும் 50 ஆயிரத்தை எட்டி வருவதால் உண்டியல் காணிக்கை ரூ.2 கோடி முதல் ரூ.3 கோடி வரை வசூலாகி வருகிறது. கடந்த மாதம் முழுவதும் வசூலான உண்டியல் காணிக்கையைக் கணக்கிட்டதில் ரூ.83.87 கோடி தேவஸ்தானத்துக்கு வருவாய் கிடைத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஷுப்மன் கில் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்: டேவிட் மில்லர்

பசுமை- குளிர்மை!

2 நாள்களுக்கு வெப்ப அலை வீசும்!

பாலியில் நிவேதிதா சதீஷ்!

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

SCROLL FOR NEXT