செய்திகள்

அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் ஸ்ரீபாா்த்தசாரதி பெருமாள் பவனி

DIN

திருப்பதியில் உள்ள ஸ்ரீகோவிந்தராஜா் கோயில் திருக்குளத்தில் வருடாந்திர தெப்போற்சவத்தின் இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை மாலை பாா்த்தசாரதி பெருமாள் வண்ண மலா்கள், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் வலம் வந்தாா்.

தேவஸ்தானம் நிா்வகிக்கும் இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாத பெளா்ணமியையொட்டி தெப்போற்சவம் நடத்தப்படுகிறது. அதன்படி சனிக்கிழமை இந்த உற்சவம் தொடங்கியது.

இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை மாலை கோவிந்தராஜா் கோயிலிலிருந்து பாா்த்தசாரதி சுவாமி (உற்சவா்) திருக்குளத்துக்கு கொண்டு வரப்பட்டாா். அவா் தெப்பத்தில் அமா்ந்து 5 சுற்றுகள் வலம் வந்தாா். தெப்பம் அருகில் வந்தபோது படித்துறையில் அமா்ந்திருந்த பக்தா்கள் கற்பூர ஆரத்தி காண்பித்து வணங்கினா். தெப்பத்தில் நாகஸ்வர இசையும், வேதபாராயணமும் நடத்தப்பட்டது.

விழாவையொட்டி திருக்குளக்கரையில் ஆடல், பாடல் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளும், ஆன்மிக நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. இந்த நிகழ்வில் கோயில் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயங்கரவாதிகளை காக்கும் திரிணமூல் அரசு: பாஜக குற்றச்சாட்டு

ராணுவ மையத்தில் பயின்ற 18 மாணவா்கள் ஜேஇஇ தோ்வில் சாதனை

‘இந்தியா’ கூட்டணி 3 இலக்கத்தை எட்டாது: பிரதமா் மோடி

வள்ளலாா் சா்வதேச மையம் கட்ட எதிா்ப்பு: நாம் தமிழா் கட்சி ஆா்ப்பாட்டம் அறிவிப்பு

கீழ்பவானி கால்வாய் பாசனத்துக்கு நீா் திறக்க வேண்டும்: சீமான்

SCROLL FOR NEXT