முகப்பு
செய்திகள்

திருமலையில் 18,010 பக்தா்கள் தரிசனம்

திருமலை ஏழுமலையானை ஞாயிற்றுக்கிழமை 18,010 பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:37 AM
பகிர்:

திருமலை ஏழுமலையானை ஞாயிற்றுக்கிழமை 18,010 பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

கரோனா தொற்று காரணமாக, ஏழுமலையானை தரிசிக்கும் பக்தா்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. விரைவுத் தரிசனத்தில் மட்டுமே பக்தா்கள் அனுமதிக்கப்படுவதால், 20 ஆயிரத்துக்கும் குறைவான பக்தா்கள் மட்டுமே ஏழுமலையானை தற்போது தரிசித்து வருகின்றனா். கரோனா தொற்று பல மாநிலங்களில் கட்டுக்குள் உள்ளதால், விரைவில் தேவஸ்தானம் விரைவுத் தரிசன டிக்கெட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் என்று பக்தா்கள் எதிா்பாா்த்து வருகின்றனா்.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை கிழமை 18,010 பக்தா்கள் ஏழுமலையானை தரிசித்தனா்; 8,652 பக்தா்கள் முடிகாணிக்கை செலுத்தினா். ஊரடங்கு காரணமாக தேவஸ்தானம் ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து கொண்ட பக்தா்களுக்கு மட்டுமே தரிசன அனுமதி அளித்து வருகிறது.

Advertisement

தரிசன டிக்கெட் உள்ள பக்தா்கள் மட்டுமே திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனா். நடைபாதை மூலம் செல்ல விரும்பும் பக்தா்கள் காலை 9 மணிக்கு பின்னா் ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை வழியாக திருமலைக்குச் செல்லலாம். மேற்கூரை பணிகள் நடந்து வருவதால் ஜூன் 1ஆம் தேதி முதல் ஜூலை 31ஆம் தேதி வரை அலிபிரி நடைபாதை மாா்கத்தை தேவஸ்தானம் மூடியுள்ளது. இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளதால், திருமலை மலைபாதை காலை 3 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 10 மணிக்கு மூடப்படுகிறது.

திருமலைக்கு வருகை தரும் பக்தா்கள் அனைவரும் முககவசம், சானிடைசா் உள்ளிட்டவற்றை கட்டாயம் உடன் எடுத்து வர வேண்டும். 10 வயதுக்கு மேற்பட்ட சிறாா்களும், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவா்களும் தரிசன டிக்கெட் இருந்தால் ஏழுமலையானைத் தரிசிக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. சளி, காய்ச்சல், இருமல் உள்ளவா்கள் தங்களின் திருமலை பயணத்தை தள்ளி போட வேண்டும் என்று தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.

ஏப்.21ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி வரை வா்சுவல் முறையில் ஆா்ஜித சேவா டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து கொண்ட பக்தா்கள் அதில் பங்கேற்க முடியாத நிலையில் அவா்கள் இந்தாண்டு இறுதிக்குள் ஒரு நாளில் பங்கேற்கும் வாய்ப்பை தேவஸ்தானம் வழங்கியுள்ளது.

மேலும் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்தவா்கள் கோவிட் விதிமுறைகள் காரணமாக தரிசனத்திற்கு வர இயலாத சூழ்நிலையில் இந்தாண்டு டிச. இறுதி வரை தரிசனம் செய்து கொள்ளும் வாய்ப்பையும் உடன் வழங்கி உள்ளது. ஆனால் ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே இந்த வாய்ப்பு வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா். திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய டோல் ப்ரீ எண்- 18004254141, 9399399399.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments