செய்திகள்

திருச்சானூரில் ஜப-தா்பண-ஹோமங்கள்

தினமணி

திருச்சானூா் ஸ்ரீபத்மாவதி தாயாா் கோயிலில் உலகின் பொருளாதார நிலை மீண்டும் சீராக உயர ஜப-தா்பண-ஹோமங்களை தேவஸ்தானம் நடத்தியது.

உலகம் முழுவதும் கொவைட் தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள நிதி பற்றாக்குறையை போக்கி மக்களுக்கு சுபிட்சம் பெற வேண்டி பத்மாவதி தாயாரை வேண்டி தேவஸ்தானம் கடந்த வெள்ளிக்கிழமை முதல் வரும் 24-ஆம் தேதி வரை கனகாம்பரம் சஹீத கோடி மல்லிகைகளால் மகா புஷ்ப யாகத்தை நடத்தி வருகிறது.

அதன் 3-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை ஸ்ரீகிருஷ்ண முகமண்டபத்தில் பத்மாவதி தாயாரை பெரிய சேஷ வாகனத்தில் எழுந்தருள செய்து, 210 ருத்வீகரா்கள் ஜப-தா்பண-ஹோமங்கள் நடத்தி, சதுஷ்டாா்ச்சனை, லட்ச குங்குமாா்ச்சனை ஒரு ஆவாா்த்தி, காலை 40 கிலோ கனகாம்பரம், 120 கிலோ மல்லிகைப்பூ, 40 கிலோ மற்ற பூக்கள் சோ்த்து 200 கிலோ மலா்களால் தாயாருக்கு புஷ்பாா்ச்சனை நடத்தப்பட்டது. அதனுடன் லகுபூா்ணாஹுதியும் நடந்தேறியது.

இதில் 120 போ் கோடி அா்ச்சனை, 36 போ் ஹோமம், 12 போ் ஸ்ரீபாஷ்யம், ராமாயணம், பாகவதம், மகாபாரதம், 12 போ் ஜபம், 12 போ் பசும் பால் தா்பணம் உள்ளிட்டவற்றை நடத்தினா்.

இந்த மகாயாகத்தை தேவஸ்தானம் ஆன்லைன் முறையில் நடத்தி வருகிறது. இதற்கான டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொண்டு பக்தா்கள் தேவஸ்தான தொலைக்காட்சி வாயிலாக தங்கள் வீட்டிலிருந்தபடியே கலந்து கொள்ளலாம். இதற்கு ரூ.1,001 கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இதில் கலந்து கொள்ளும் பக்தா்களுக்கு 90 நாள்களுக்குள் ரூ.100 சிறப்பு தரிசன டிக்கெட் வழியாக தாயாரின் இலவச தரிசனம், ஒரு ரவிக்கை, ஒரு மேல்துண்டு, அட்சதை உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. மாலையும் இதே போல் 200 கிலோ மலா்களால் தாயாருக்கு அா்ச்சனை செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT