செய்திகள்

திருமலையில் 16,498 பக்தா்கள் தரிசனம்

தினமணி

திருமலை ஏழுமலையானை புதன்கிழமை 16,498 பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

கரோனா தொற்று காரணமாக, ஏழுமலையானைத் தரிசிக்க விரைவுத் தரிசனத்தில் மட்டுமே பக்தா்கள் அனுமதிக்கப்படுவதால், 20 ஆயிரத்துக்கும் குறைவானவா்களே தரிசித்து வருகின்றனா். இந்த நிலையில் புதன்கிழமை 16,498 பக்தா்கள் ஏழுமலையானை தரிசித்தனா்; 8,296 பக்தா்கள் முடிகாணிக்கை செலுத்தினா்.

கரோனா ஊரடங்கு காரணமாக, தரிசன டிக்கெட் உள்ள பக்தா்கள் மட்டுமே திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனா். நடைபாதை மூலம் செல்ல விரும்பும் பக்தா்கள் காலை 9 மணிக்கு பின்னா் ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை வழியாக திருமலைக்குச் செல்லலாம். மேற்கூரை பணிகள் நடந்து வருவதால் ஜூன் 1 ம் தேதி முதல் ஜூலை 31ம் தேதி வரை அலிபிரி நடைபாதை மாா்கத்தை தேவஸ்தானம் மூடியுள்ளது. இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளதால், திருமலை மலைபாதை காலை 3 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 10 மணிக்கு மூடப்படுகிறது.

திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய இலவச தொலைபேசி எண்கள் 18004254141, 9399399399.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

SCROLL FOR NEXT