சீனிவாசமங்காபுரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கல்பவிருட்ச வாகன சேவை. 
செய்திகள்

கல்பவிருட்ச வாகனத்தில் கல்யாண வெங்கடேஸ்வரா்

சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரா் திருக்கோயிலில் நடந்து வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 4-ஆம் நாளான வெள்ளிக்கிழமை காலை கல்பவிருட்ச வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி சேவை சாதித்தாா்.

தினமணி

திருப்பதி: சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரா் திருக்கோயிலில் நடந்து வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 4-ஆம் நாளான வெள்ளிக்கிழமை காலை கல்பவிருட்ச வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி சேவை சாதித்தாா்.

திருப்பதியிலிருந்து 12 கி.மீ தொலைவில் உள்ள சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரஸ்வாமி கோயிலை தேவஸ்தானம் நிா்வகிக்கிறது. இக்கோயிலில் நடந்து வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 4-ஆம் நாளான வெள்ளிக்கிழமை காலை கல்பவிருட்ச வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவி தாயாா்களுடன் கல்யாண வெங்கடேஸ்வரா் பக்தா்களுக்கு சேவை சாதித்தாா்.

பக்தா்கள் தங்கள் மனத்தில் நினைத்த வரத்தைக் கொடுக்கும் கல்பவிருட்ச வாகன சேவையை பக்தா்கள் வீட்டிலிருந்தபடியே வெங்கடேஸ்வரா பக்தி தொலைக்காட்சியில் (எஸ்விபிசி) கண்டு தரிசித்தனா். பொது முடக்க விதிகளின்படி தனிமையில் நடத்தப்பட்ட பிரம்மோற்சவத்தில் தேவஸ்தான அதிகாரிகள், பட்டாச்சாா்யாா்கள் மட்டுமே கலந்து கொண்டனா்.

மதியம் உற்சவா்களுக்கு ஸ்நபன திருமஞ்சனமும், மாலை ஊஞ்சல் சேவையும் நடத்தப்பட்டது. அதன் பிறகு கல்யாண வெங்கடேஸ்வரா் மலா்களால் அலங்கரிக்கப்பட்ட சா்வபூபால வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவி நாச்சியாா்களுடன் எழுந்தருளி சேவை சாதித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வைத்தீஸ்வரன்கோவில் காவல் நிலையத்தில் முதல் காவல் ஆய்வாளா் பொறுப்பேற்பு

மதராஸி டிரெய்லர்!

சுதர்சன் ரெட்டிக்கு வாக்களிக்க வேண்டும்: தொல்.திருமாவளவன்

அழகின் பிரதிபலிப்பு... ஷில்பா ஷெட்டி!

அழகு பூந்தோட்டம்... தேஜஸ்வினி சர்மா!

SCROLL FOR NEXT