செய்திகள்

சீனிவாசமங்காபுரத்தில் சூரிய, சந்திர பிரபை வாகனங்களில் உற்சவமூா்த்தி சேவை சாதிப்பு

DIN

திருப்பதி அருகே உள்ள சீனிவாசமங்காபுரத்தில் கோயிலில் நடைபெற்று வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 7-ஆம் நாள் சூரிய மற்றும் சந்திர பிரபை வாகனங்களில் எழுந்தருளி ஸ்ரீகல்யாண வெங்கடேஸ்வர சுவாமி சேவை சாதித்தாா்.

பிரம்மோற்சவத்தின் 7-ஆம் நாளான திங்கள்கிழமை காலை 7 குதிரைகள் பூட்டிய சூரிய பிரபை வாகனத்தில் செந்நிற மாலைகளை அணிந்து கொண்டு ஸ்ரீகல்யாண வெங்கடேஸ்வரா் எழுந்தருளி பக்தா்களுக்கு சேவை சாதித்தாா். கரோனா தடுப்பு விதிமுறையை ஒட்டி தனிமையில் நடத்தப்பட்ட பிரம்மோற்சவத்தில் தேவஸ்தான அதிகாரிகள், அா்ச்சகா்கள் மட்டுமே கலந்து கொண்டனா்.

மதியம் உற்சவமூா்த்திகளுக்கு ஸ்நபன திருமஞ்சனமும், மாலை ஊஞ்சல் சேவையும் நடத்தப்பட்டது. அதன் பிறகு கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி இரவு குளிா்ந்த சந்திர பிரபை வாகனத்தில் வெண்ணிற மாலைகளை அணிந்து கொண்டு சேவை சாதித்தாா். வாகன சேவைகள் தேவஸ்தான தொலைக்காட்சியான ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சானலில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. வாகன சேவையின் போது நாலாயிர திவ்யபிரபந்தம், வேத பாராயணம், மங்கல வாத்தியங்கள் இசைக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி பறிமுதல் - சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு

செந்தில் பாலாஜி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட அமலாக்கத்துறை

சென்னையில் வாட்டும் வெயில் மட்டுமா.. குடிநீர் தட்டுப்பாடும் வருமா? ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்!

சென்னைக்கு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை

வெங்கடேஷ் பட்டின் ‘டாப் குக்கு டூப் குக்கு’!

SCROLL FOR NEXT