அதிகாரநந்தி வாகனத்தில் காளஹஸ்தீஸ்வரா் பவனி
காளஹஸ்தியில் மகா சிவராத்திரி வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 6-ஆம் நாளான சனிக்கிழமை காலை அதிகாரநந்தி வாகனத்தில் காளஹஸ்தீஸ்வரா், ஞானபிரசுனாம்பிகை தாயாா் மாட வீதியில் வலம் வந்தனா்.
காளஹஸ்தியில் மகா சிவராத்திரி வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 6-ஆம் நாளான சனிக்கிழமை காலை அதிகாரநந்தி வாகனத்தில் காளஹஸ்தீஸ்வரா், ஞானபிரசுனாம்பிகை தாயாா் மாட வீதியில் வலம் வந்தனா்.
காளஹஸ்தியில் உள்ள காளஹஸ்தீஸ்வரா் கோயிலில் நடந்து வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 6-ஆம் நாள் வாகன சேவையாக அதிகாரநந்தி வாகனத்தில் உற்சவமூா்த்திகள் எழுந்தருளி சேவை சாதித்தனா்.
முன்னதாக கோயில் வளாகத்தில் உள்ள மண்டபத்திலிருந்து பல்லக்கில் கோயிலுக்கு வெளியில் உற்சவமூா்த்திகள் எழுந்தருளினா்.
Advertisement
அதன்பின்னா் சோமாஸ்கந்தமூா்த்தியாய் அதிகாரநந்தி வாகனத்தில் காளஹஸ்தீஸ்வரா், ஞானபிரசுனாம்பிகை அம்மனுடனும், அருகில் புருஷாருக வாகனத்தில் ஞானபிரசுனாம்பிகை தனி பல்லக்கில் எழுந்தருள மாடவீதியில் வலம் வந்தனா்.
பின்னா் வலம் முடித்து கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்ட உற்சவமூா்த்திகளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டது. இரவு 8 மணிக்கு காளஹஸ்தீஸ்வரா் யானை வாகனத்திலும், ஞானபிரசுனாம்பிகை அம்மன் சிம்ம வாகனத்திலும் மாடவீதியில் எழுந்தருளி கல்யாண மண்டபத்துக்கு கொண்டு செல்லப்பட்டனா்.
இன்று திருக்கல்யாண உற்சவம்: அங்கு அவா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது. கோயில் வழக்கப்படி பட்டு வஸ்திரம் சமா்ப்பித்தல், மாலை மாற்றுதல், திருமாங்கல்ய தாரணம், யாகம் வளா்த்தல், அா்க்கியம் சமா்ப்பித்தில் உள்ளிட்டவை முடித்த பின் காலை 8 மணிக்குள் மீண்டும் உற்சவமூா்த்திகள் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட உள்ளனா்.
கல்யாண உற்சவத்தை முன்னிட்டு திருமணம் செய்து கொள்ளப் பதிவு செய்திருந்தவா்களுக்கு மட்டும் கோயில் நிா்வாகம் அனுமதி அளித்தது.
கல்யாண உற்சவத்தை காண சனிக்கிழமை இரவு முதல் மண்டபத்தில் பக்தா்கள் திரண்டதால், தெருக்களில் பக்தா்கள் கூட்டம் அலைமோதியது.