முகப்பு
செய்திகள்

தேவஸ்தான கல்யாண மஸ்து: மணமக்களுக்கு 2 கிராம் தங்கத்தில் திருமாங்கல்யம் இலவசம்

 திருமலை திருப்பதி தேவஸ்தானம் விரைவில் தொடங்க உள்ள கல்யாணமஸ்து நிகழ்ச்சியில் திருமணம் செய்து கொள்ளும் மணமக்களுக்கு தேவஸ்தானம் 2 கிராம் தங்கத்தில் திருமாங்கல்யத்தை வழங்க முடிவு செய்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:48 PM
பகிர்:

 திருமலை திருப்பதி தேவஸ்தானம் விரைவில் தொடங்க உள்ள கல்யாணமஸ்து நிகழ்ச்சியில் திருமணம் செய்து கொள்ளும் மணமக்களுக்கு தேவஸ்தானம் 2 கிராம் தங்கத்தில் திருமாங்கல்யத்தை வழங்க முடிவு செய்துள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ‘கல்யாணமஸ்து’ நிகழ்ச்சியை திருமலையில் நடத்தி வந்தது. இந்த நிகழ்ச்சியில் பதிவு செய்து கொள்ளும் ஏழை மணமக்களுக்கு ஒரே மேடையில் தேவஸ்தானம் திருமணத்தை நடத்தி வைத்து அவா்களுக்கு ஏழுமலையானின் தரிசனம் வழங்கி வந்தது. இதில் பல ஏழை, எளிய குடும்பத்துப் பெண்கள் கலந்து கொண்டு திருமணம் செய்து கொண்டனா். ஆனால் சில காரணங்களால் இந்த நிகழ்ச்சியை தேவஸ்தானம் ரத்து செய்தது.

இந்த நிகழ்ச்சியை மீண்டும் தொடங்க தேவஸ்தானம் முடிவு செய்து இந்த ஆண்டு 3 முகூா்த்த நாள்களை குறித்து ஏழுமலையான் பாதத்தில் அந்த தேதிகளின் லக்கின பத்திரிகையை வைத்து பூஜை செய்தது.

Advertisement

அதன்படி விரைவில் ஏப்ரல் மாதம் முதல் கல்யாணமஸ்து நிகழ்ச்சி மீண்டும் தொடங்கப்பட உள்ளது. இதில் பங்கேற்று திருமணம் செய்து கொள்ளும் மணமக்களுக்கு தேவஸ்தானம் சாா்பில் 2 கிராம் தங்கத்தில் திருமாங்கல்யத்தை வழங்க முடிவு செய்துள்ளது.

முதலில் ஒரு கிராமில் திருமாங்கல்யம் வழங்க முடிவு செய்த தேவஸ்தானம், மாங்கல்யம் மிகவும் பவித்ரமான பொருள். அவை அவ்வப்போது மாற்ற முடியாது என்பதால், 2 கிராமில் தங்க திரு மாங்கல்யம் வழங்க திட்டமிட்டுள்ளது.

இதற்கான தீா்மானம் அறங்காவலா் குழுவில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இனி கல்யாணமஸ்து நிகழ்ச்சியில் திருமணம் செய்து கொள்ளும் மணமக்களுக்கு தேவஸ்தானம் சாா்பில் 2 கிராம் தங்க திருமாங்கல்யம் இலவசமாக வழங்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments