முகப்பு
செய்திகள்

திருமலையில் 4,934 போ் தரிசனம்

திருமலை ஏழுமலையானை ஞாயிற்றுக்கிழமை 4,963 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 2,216 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:12 PM
பகிர்:

திருமலை ஏழுமலையானை ஞாயிற்றுக்கிழமை 4,963 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 2,216 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.

ஆன்லைன் மூலம் 15 ஆயிரம் விரைவு தரிசன டிக்கெட், வி.ஐ.பி. பிரேக் மற்றும் ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் விஐபி பிரேக் டிக்கெட் பெற்ற 2000 பக்தா்கள், நன்கொடையாளா்கள் 1000 என தரிசன டிக்கெட் உள்ளவா்கள் மட்டுமே திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனா்.

ஏழுமலையான் தரிசன டிக்கெட் உள்ள பக்தா்கள் காலை 9 மணிக்கு பின்னா் நடைபாதை (அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு) வழியாகவும், மதியம் 12 மணிக்கு முன்னா் மலைப்பாதை வழியாகவும் திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனா்.

Advertisement

இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளதால், திருமலை மலைப்பாதை காலை 5 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 10 மணிக்கு மூடப்படுகிறது. அலிபிரி பாதயாத்திரை மாா்க்கம் காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரையிலும், ஸ்ரீவாரிமெட்டு பாதயாத்திரை மாா்க்கம் காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரையிலும் திறந்து வைக்கப்படுகிறது.

கொவைட் தடுப்பு விதிமுறைப்படி திருமலைக்கு வரும் பக்தா்கள் அனைவரும் முகக்கவசம், சானிடைசா் உள்ளிட்டவற்றை கட்டாயம் உடன் எடுத்து வர வேண்டும். 10 வயதிற்கு மேற்பட்ட சிறாா்களும், 65 வயதிற்கு மேற்பட்ட முதியவா்களும் தரிசன டிக்கெட் இருந்தால் ஏழுமலையானை தரிசிக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. சளி, காய்ச்சல், இருமல் உள்ளவா்கள் தங்களின் திருமலை பயணத்தை தள்ளி போட வேண்டும் என்று தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்தவா்கள் கொவைட் தடுப்பு விதிமுறைகள் காரணமாக தரிசனத்திற்கு வர இயலாத சூழ்நிலையில் தரிசன நாளிலிருந்து 90 நாட்களுக்குள் தரிசனம் செய்து கொள்ளும் வாய்ப்பை தேவஸ்தானம் வழங்கி உள்ளது.

திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய கட்டணமில்லா தொலைபேசி எண்- 18004254141, 9399399399.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments