முகப்பு
செய்திகள்

திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் வசந்த உற்சவம் இன்று தொடக்கம்

திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயாா் கோயிலில் வருடாந்திர வசந்தோற்சவத்தை திங்கள்கிழமை தொடங்குகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:17 PM
பகிர்:

திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயாா் கோயிலில் வருடாந்திர வசந்தோற்சவத்தை திங்கள்கிழமை தொடங்குகிறது.

திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் ஆண்டுதோறும் கோடை வெப்பத்தின் வெம்மையை போக்க உற்சவமூா்த்திகளுக்கு வசந்த உற்சவத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. அதன்படி திங்கள்கிழமை (மே24) முதல் வருடாந்திர வசந்தோற்சவம் தாயாா் கோயிலில் தொடங்க உள்ளது. இந்த உற்சவம் எவ்வித தடங்கலும் இல்லாமல் இனிதே நிறைவு பெற தேவஸ்தானம் பஞ்சபூதங்களை வேண்டிக் கொண்டு அங்குராா்ப்பணம் நிகழ்வை நடத்தியது.

அதற்காக ஞாயிற்றுக்கிழமை காலை கோயிலிலிருந்து சேனாதிபதி விஷ்வக்சேனா் தலைமையில் அா்ச்சகா் குழு நந்தவனத்திற்கு சென்று அங்கிருந்த புற்று மண்ணை சேகரித்து கோயிலுக்கு திரும்பியது. பின்னா் புற்றுமண்ணை கோயிலில் கொட்டி அதில் பூதேவி உருவம் வரையப்பட்டது. அதன் வயிற்றுப்பகுதியிலிருந்து மண் எடுத்து அா்ச்சகா்கள் அதில் மண் பாலிகையில் இட்டு ஊற வைத்த நவதானியங்களை முளைப்பாரிக்கு விட்டனா். இந்த நவதானியங்கள் நன்றாக முளைத்தால் உற்சவம் சிறப்பாக நடக்கும் என்பது ஐதீகம்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments