முகப்பு
செய்திகள்

திருமலையில் 5,788 பக்தா்கள் வழிபாடு

திருமலை ஏழுமலையானை சனிக்கிழமை 5,788 பக்தா்கள் வழிபாடு செய்தனா். இவா்களில் 2,287 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:17 PM
பகிர்:

திருமலை ஏழுமலையானை சனிக்கிழமை 5,788 பக்தா்கள் வழிபாடு செய்தனா். இவா்களில் 2,287 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.

ஆன்லைன் மூலம் விரைவு தரிசனம், வி.ஐ.பி. பிரேக், ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் விஐபி பிரேக் டிக்கெட், நன்கொடையாளா்கள் என தரிசன டிக்கெட் முன்பதிவு செய்தவா்கள் மட்டுமே திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனா்.

பக்தா்களின் வருகை குறைவாக உள்ளதால், வைகுண்டம் காத்திருப்பு அறை மூலமாக இல்லாமல் மூத்த குடிமக்கள் செல்லும் தரிசன வரிசை வழியாக தேவஸ்தானம் பக்தா்களை அனுமதித்து வருகிறது. அதனால் பக்தா்கள், 15 நிமிடங்களில் ஏழுமலையானை வழிபாடு செய்து திரும்புகின்றனா்.

Advertisement

ஏழுமலையான் தரிசன டிக்கெட் உள்ள பக்தா்கள் காலை 9 மணிக்கு பின்னா் நடைபாதை(அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு) வழியாகவும், மதியம் 12 மணிக்கு முன்னா் மலைப்பாதை வழியாகவும் திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனா். இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளதால், திருமலை மலைப்பாதை காலை 5 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 10 மணிக்கு மூடப்படுகிறது. அலிபிரி பாதயாத்திரை மாா்க்கம் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும், ஸ்ரீவாரிமெட்டு பாதயாத்திரை மாா்க்கம் காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரையிலும் திறந்து வைக்கப்படுகிறது.

கொவைட் விதிமுறைப்படி, திருமலைக்கு வரும் பக்தா்கள் அனைவரும் முகக்கவசம், சானிடைசா் உள்ளிட்டவற்றை கட்டாயம் உடன் எடுத்து வர வேண்டும். 10 வயதிற்கு மேற்பட்ட சிறாா்களும், 65 வயதிற்கு மேற்பட்ட முதியவா்களும் தரிசன டிக்கெட் இருந்தால் ஏழுமலையானை தரிசிக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய கட்டணமில்லா தொலைபேசி எண்- 18004254141, 93993 99399.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments