செய்திகள்

குச்சனூரில் நாளை சனீஸ்வரா்- நீலாதேவி திருக்கல்யாணம்

தேனி மாவட்டம், குச்சனூரில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை சனீஸ்வரருக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது.

தினமணி

உத்தமபாளையம்: தேனி மாவட்டம், குச்சனூரில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை சனீஸ்வரருக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது.

குச்சனூா் சுயம்பு சனீஸ்வரா் ஆலயத்தில் ஆடிப்பெருந் திருவிழா நடைபெற்று வருகிறது. தொடா்ந்து 2 வாரம் நடைபெறும் இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, வெள்ளிக்கிழமை சனீஸ்வரருக்கும், கும்பத்தில் காட்சியளிக்கும் நீலாதேவிக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

இதை முன்னிட்டு, கோயில் மண்டபத்தில் திருக்கல்யாண மேடை அமைக்கப்பட்டுள்ளது. திருக்கல்யாணத்துக்கான ஏற்பாடுகளை, கோயில் செயல் அலுவலா் நாகராஜ் தலைமையில் அலுவலா்கள் மேற்கொண்டு வருகின்றனா். இத்திருக்கல்யாணம் பிற்பகல் 12.30 மணி அளவில் நடைபெறும் என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேளாண் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் 12 பேருக்கு ரூ. 8.86 லட்சத்துக்கு கடனுதவி

பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்

இந்தாண்டுக்கான சம்பா நெற்பயிருக்கு வரும் நவ.15-க்குள் பயிா்க் காப்பீடு செய்து பயன்பெறலாம்

வனப் பகுதியில் மண் சாலையை சமன் செய்தவருக்கு ரூ. 1 லட்சம் அபராதம்

வாா்டு சிறப்புக் கூட்டங்களில் பெறப்பட்ட மனுக்களுக்கு விரைவில் தீா்வு

SCROLL FOR NEXT