சபரிமலை ஐயப்பன் கோயிலில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரிக்குப் பதிலாக ஐயப்பனுக்கு சந்தன அபிஷேகம் செய்ய குடத்துடன் வரும் திருவல்லா காவுபாகம் நாராயணன் நம்பூதிரி. உடன் சபரிமலை தந்திரி கண்டரரூ ராஜீவரூ.  
செய்திகள்

டிச.27ல் மண்டல பூஜை: சபரிமலை மேல் சாந்தி பங்கேற்கவில்லை!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 27ஆம் தேதி நடைபெறவுள்ள மண்டல பூஜையில் மேல் சாந்தி ஜெயராமன் நம்பூதிரி பங்கேற்கமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 27ஆம் தேதி நடைபெறவுள்ள மண்டல பூஜையில் மேல் சாந்தி ஜெயராமன் நம்பூதிரி பங்கேற்கமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சபரிமலை மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரியின் மாமா இறந்ததையடுத்து, சபரிமலை சம்பிரதாயப்படி, சன்னிதானம் பூஜை வழிபாடுகளில் இருந்து 10 நாள்கள் விலகியுள்ளார்.

மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரியின் தாயாரின் சகோதரரும், திருச்சூர் பெருங்கோட்டு கரை கிழக்கு செருமுக்கு மனைக்கள் சி.கே.கோதன் நம்பூதிரி மரணமடைந்ததால் சபரிமலை மேல்சாந்தி கே.ஜெயராமன் நம்பூதிரி 10 நாள்களுக்கு சன்னிதானத்தில் உள்ள சபரி விருந்தினர் மாளிகைக்கு மாற்றப்பட்டார். அதற்கு பதிலாக தந்திரி கண்டரரு ராஜீவரு பூஜை முறைகளை ஏற்று நடத்துவார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும், ஐயப்பனுக்கு பூஜை பணிகளை மேற்கொள்ள திருவல்லா காவுபாகம் நாராயணன் நம்பூதிரி பூஜைகளை மேற்கொள்வார். 10 நாள்கள் நிறைவடைந்த பின் மேல் சாந்தி ஜெயராமன் நம்பூதிரி மீண்டும் சபரிமலை சன்னிதானத்தில் தன்னுடைய சேவையினை தொடங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

"அனைவருக்கும் ஸ்டார்ட்அப்' மையம் சென்னை ஐஐடி-யில் தொடக்கம்

வாக்குச்சாவடி நிலைய அலுவலா் 2-க்கான ஆலோசனைக் கூட்டம்

பால் பண்ணை தொழில் முனைவோருக்கு ஒரு மாத திறன் மேம்பாட்டுப் பயிற்சி இன்று தொடக்கம்

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடக்கம்: வீடு வீடாகச் சென்று படிவங்கள் அளிப்பு

SCROLL FOR NEXT