செய்திகள்

காளிகாம்பாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம் தொடக்கம்

சென்னை, பாரிமுனையிலுள்ள ஸ்ரீ காளிகாம்பாள் சமேத கமடேஸ்வரர் திருக்கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம் நேற்று கணபதி பூஜையுடன் தொடங்கியது. 

தினமணி

சென்னை, பாரிமுனையிலுள்ள ஸ்ரீ காளிகாம்பாள் சமேத கமடேஸ்வரர் திருக்கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம் நேற்று கணபதி பூஜையுடன் தொடங்கியது. 

சென்னை, தம்புச் செட்டித் தெருவில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றாகத் திகழும் ஸ்ரீ காளிகாம்பாள் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாத பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் இந்தாண்டுக்கான பிரம்மோற்சவ விழா இன்று தொடங்கியது. 

வைகாசி பிரம்மோற்சவ விழா 03.06.22 முதல் 12.06.22 வரை நடைபெற உள்ளது. 

பிரம்மோற்சவத்தின் முதல் நாளான இன்று இரவு 7.00 மணியளவில் அம்மாள் வீதி உலா நடைபெறுகிறது. 

இரண்டாம் நாளான நாளை(04.06.22) சனிக்கிழமை இரவு 7.00 மணியளவில் காமதேனு வாகனத்தில் ஸ்ரீ அம்பாள் வீதி உலா நடைபெற உள்ளதால் விஸ்வகர்ம சேவார்த்திகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் வருகை தந்து ஸ்ரீ அம்பாளின் திருவருளை பெறுவோமாக. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு! கனிமொழி தலைமையில் ஆலோசனை!

திருப்பரங்குன்றத்தில் மறியலில் ஈடுபட்ட 62 பேர் மீது வழக்கு

தவெகவின் சமத்துவ கிறிஸ்துமஸ்! விஜய் கொண்டாட்டம்!

தேர்தல் நன்கொடை பத்திரங்கள் ரத்து! மாற்றி யோசித்த பாஜக, ரூ.6088 கோடி வசூலித்து சாதனை!

SCROLL FOR NEXT