செய்திகள்

திருத்தணி முருகன் கோயிலில் தொடங்கிய கந்த சஷ்டி விழா!

திருத்தணி முருகன் கோயிலில் நிகழாண்டுக்கான கந்த சஷ்டி விழா இன்று கோலாகலமாகத் தொடங்கியது. 

தினமணி

திருத்தணி முருகன் கோயிலில் நிகழாண்டுக்கான கந்த சஷ்டி விழா இன்று கோலாகலமாகத் தொடங்கியது. 

இந்தாண்டு கந்த சஷ்டி விழா இன்று முதல்  அக்.31-ஆம் தேதி வரை 6 நாள்கள் நடைபெற உள்ளன. சஷ்டியின் ஆறு நாள்களும் உற்சவா் முருகப் பெருமான் வள்ளி-தெய்வானையுடன் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை காவடி மண்டபத்தில் எழுந்தருள்வார். அங்கு, சுவாமிக்கு லட்சார்ச்சனை நடைபெறும்.

முக்கிய நிகழ்வாக வரும் அக்.30-ஆம் தேதி மாலை 6 மணிக்கு புஷ்பாஞ்சலியும், 31-ஆம் தேதி காலை 10 மணிக்கு கல்யாண உற்சவருக்குத் திருக்கல்யாணம் நிகழ்ச்சியும் நடைபெறும்.

விழா நாள்களில் நாகஸ்வர இன்னிசை நிகழ்ச்சி, பரதநாட்டியம், பக்தி இசை, ஆன்மிகச் சொற்பொழிவு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.

ஏற்பாடுகளை கோயில் தக்காா் ஜெயப்பிரியா, உதவி ஆணையர் விஜயா ஆகியோர் செய்து வருகின்றனர். 

இன்று காலை தொடங்கிய கந்த சஷ்டி விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று முருகப்பெருமானை தரிசனம் செய்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு

மழைநீா் கால்வாயில் கழிவு நீா் கொட்டிய வாகனம் பறிமுதல்

ஆதா்ஷ் ரயில் நிலையம் அருகே கொலை செய்யப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

10 கிலோ கஞ்சா பறிமுதல் பெண் உள்பட 3 போ் கைது

தில்லி, உ.பி.யில் போலீஸாா் அதிரடி சோதனை: ரூ.30 லட்சம் ஹெராயினுடன் 2 போ் கைது!

SCROLL FOR NEXT