சபரிமலை ஐயப்பன் கோயில் இன்று மாலை நடை திறப்பு!
புரட்டாசி மாதப் பிறப்பை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் இன்று மாலை நடை திறக்கப்படுகிறது.
புரட்டாசி மாதப் பிறப்பை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் இன்று மாலை நடை திறக்கப்படுகிறது.
சரிபலை ஐயப்பன் கோயில் மண்டல, மகரவிளக்கு பூஜை தவிர தமிழ் மாதப் பிறப்பையொட்டி முதல் 5 நாள்கள் நடை திறக்கப்பட்டு சிறப்புப் பூஜைகள் வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்.
படிக்க: தில்லியில் மேலும் ஒருவருக்கு குரங்கு காய்ச்சல்: பாதிப்பு 13 ஆக உயர்வு!
Advertisement
Advertisement
இந்நிலையில், புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை 16-ம் தேதி(வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. கோயில் தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி திறந்து வைக்கிறார். தொடர்ந்து 21-ம் தேதி வரை 5 நாள்கள் பூஜைகள் நடைபெறும்.
இந்த நாள்களில் தினமும் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், உஷபூஜை, உச்ச பூஜைக்கு பின் மதியம் 1 மணியளவில் நடை அடைக்கப்படும். மீண்டும் மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு தீபாராதனை அபிஷேகம் நடைபெறும். அதைத்தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு அரிவராசனம் பாடி கோயில் நடை அடைக்கப்படும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.