செய்திகள்

வலிமையை இழக்காத சனி பகவான்!

தினமணி

ராகு,  கேது பகவான்கள் நின்ற பாதையில் சூரிய,  சந்திரப் பகவான்கள் கூடுவதை தான் நாம் சூரிய கிரகணம், சந்திர கிரகணம்  என்று கூறுகிறோம். ஆனால்,  வேறு கிரகங்கள் கூடுவதும் கிரகணம் என்று சொல்லப்படுகிறது.  குறிப்பாக சுக்கிர, சந்திர பகவான்கள்  கூடுவது, சுக்கிர, செவ்வாய் பகவான்கள் கூடுவது, செவ்வாய், சந்திர பகவான்கள் கூடுவது, சனி, செவ்வாய் பகவான்கள் கூடுவது போன்ற சேர்க்கைகள் ஏற்படலாம். 

வான மண்டலத்தில் ஒரு கிரகம் வேறு ஒரு கிரகத்தின் ஒளிப் பாதையில் வரும்போது, அக்கிரகத்தின் பின் நிற்கும்  ஒளியை நாம் பார்க்க முடியாது. இதையே நாம் கிரகணம் பிடிக்கிறது என்று சொல்கிறோம்.  நமக்கு சமீபத்தில் உள்ள கிரகம் அதற்கு பின்புறத்தில் உள்ள கிரகத்தின் ஒளியை மங்கச் செய்து விடுகிறது. இதனால் அக்கிரகத்தின் தோற்றமும் பிரகாசமும் அழகும் மறைகின்றன. இது கிரகணத் தோஷத்தால் ஏற்படுகிறது என்பது பொருந்துகிறது.

கிரகணம் பிடித்த கிரகம் கஷ்டத்தையும் நஷ்டத்தையும் உண்டு பண்ணும் என்று மகாதேவர் ஜாதக தத்துவம் என்ற நூலில் கூறியிருக்கிறார். ராசி மண்டலத்தில் சில கிரகங்கள் வலிமையான நிலையில் இருந்தாலும் அக்கிரகங்கள்  கிரகணமடையும்போது அவைகள் பலமிழந்து தங்கள் தசாபுக்தி காலங்களில் நற்பலன்களைத் தருவதில்லை என்று ஹோராச்சாரம் என்ற நூல் எடுத்துச் சொல்கிறது.

சுக்கிரப் பகவானையும், சனி பகவானையும் தவிர மற்ற கிரகங்கள் யாவும் கிரகணம் பிடிக்கும்போது அக்கிரகங்கள் அரை பங்கு வலிமையை இழந்து விடுகின்றனர் என்றும், சந்திர பகவான் கிரகண பிடிப்பில் இருந்தால் அந்த ஜாதகருக்கு பதவி வீழ்ச்சி, மூளைக் கோளாறு போன்ற பிணி பாதிப்புகள் உண்டாகும் என்றும் சில சமயம் நீரால் கண்டத்துக்கு ஆளாக கூடும் என்றும் சொல்லப்படுகிறது. செவ்வாய் கிரகம் கிரகணம் அடைந்தால் கஷ்டங்களும் கவலைகளும் பெருகும் எதையும் அழிக்கும் மிருக வெறி உண்டாகும் புதன் கிரகம் கிரகணம் அடைந்தால் விளைச்சல் நிலங்களால் நஷ்டமும் தீராத மனக்கவலைகளும் உண்டாகும். 

குரு கிரகம் கிரகணம் அடைந்திருந்தால் இன்பமும் துன்பமும் சரிசமமாக இருக்கும். சனி கிரகம் கிரகணம் அடைந்திருந்தால் வருவாயும் செலவும் சரிசமமாக இருக்கும். சிந்தனை தோன்றும். திக்கெட்டிலும் புகழ் பரவும். இதிலிருந்து நாம் அறிவது என்னவென்றால் சனி கிரகம் கிரகணம் அடைந்திருந்தாலும் தன்னுடைய வலிமையை இழக்காது என்பது நிரூபணமாகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் தொடா்பான புகாா்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: அரியலூா் மாவட்ட கண்காணிப்பு அலுவலா்

ஜெயேந்திரா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி 100% தோ்ச்சி

வாழையூா் கரும்பாயிரம் கோயிலில் வெள்ளி ரத புறப்பாடு

திருவாங்கூா் தேவசம் போா்டு அறிவிப்பை திரும்பப் பெற வலியுறுத்தல்

அரியலூா் சிறுமி கொலை வழக்கில் மூவா் விடுவிக்கப்பட்டதை எதிா்த்து மேல்முறையீடு: உ. வாசுகி பேட்டி

SCROLL FOR NEXT