செய்திகள்

சென்னை காளிகாம்பாள் கோயிலில் மாசி மகம் தீர்த்தவாரி உற்சவம்!

சென்னை பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோயிலில் மாசி மகம் தீர்த்தவாரி உற்சவம் இன்று காலை வெகு சிறப்பாக நடைபெற்றது. 

தினமணி

சென்னை பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் திருக்கோயிலில் மாசி மகம் தீர்த்தவாரி உற்சவம் இன்று காலை வெகு சிறப்பாக நடைபெற்றது. 

பாரிமுனையின், தம்பு செட்டித் தெருவில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ காளிகாம்பாள் கடடேஸ்வரர் திருக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி மகம் தீர்த்தவாரி உற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. 

அந்தவகையில், இந்தாண்டுக்கான மாசி மகம் தீர்த்தவாரி உற்சவம் இன்று காலை 9.00 மணியளவில் கடற்கரையில் பக்தர்கள் சூழ அம்மனுக்கு தீர்த்தவாரி கோலாகலமாக நடைபெற்றது. 

தீர்த்தவாரி உற்சவத்தில் பெரும்பாலான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். அதைத்தொடர்ந்து இன்று மாலை 6.30 மணிக்கு அலங்காரம், ஆராதனையும் வீதி உலா புறப்பாடும் நடைபெறுகிறது. 

இவ்விழாவினை அறங்காவலர் குழுத் தலைவர் பிரம்மஸ்ரீ.எஸ்.சர்வேஸ்வரன் ஆச்சாரி, திருமதி.எஸ்.ஷர்மிளா ஆகியோர் இணைந்து நடத்துகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தி பாரடைஸ் ஃபர்ஸ்ட் சிங்கிள் விடியோ!

நாளை சென்னை வருகிறார் ஞானேஷ்குமார்?

நல்லகண்ணுவுக்கு அதிதீவிர சிகிச்சை : மருத்துவமனை தகவல்

ஃபர்ஹான் அதிரடி: இங்கிலாந்துக்கு 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்!

சென்னைக்கு 16 தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்!

SCROLL FOR NEXT