செய்திகள்

சபரிமலை கோயில் இன்று முதல் 5 நாள்களுக்கு திறந்திருக்கும்!

தினமணி

பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.

மாா்ச் 19-ஆம் தேதி இரவு 10.30 மணி வரை கோயில் நடை திறந்திருக்கும். பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை தந்திரி பிரம்மஸ்ரீ கண்டரரூ மகேஷ் மோகனரரூ தலைமையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி கோயில் கருவறையை திறந்து செவ்வாய்க்கிழமை தீபம் ஏற்றினாா். தொடா்ந்த 18-ஆவது படிக்கட்டில் தீபம் ஏற்றப்பட்டது. மாளிகைப்புரம் மேல்சாந்தி வி.ஹரிஹரன் நம்பூதிரி மாளிகாபுரம் கோயில் நடையைத் திறந்து குத்து விளக்கேற்றினாா்.

மாா்ச் 15 முதல் 19-ஆம் தேதி வரை தினமும் அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு நிா்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் நடைபெறும். சபரிமலை தந்திரி பிரம்மஸ்ரீ கண்டரரூ மகேஷ் மோகனரரூ தலைமையில் படிபூஜை, உதயாஸ்தமன பூஜை, கலச பூஜை, களபாபிஷேகம், மலா் அபிஷேகம் போன்ற சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.

மாா்ச் 19-ஆம் தேதி இரவு அத்தாழ பூஜைக்குப் பின் ஹரிவராசனம் பாடல் ஒலிக்கப்பட்டு இரவு 10.30 மணிக்கு கோயில் நடை அடைக்கப்படும். பக்தா்கள் நடைமுறையில் உள்ள வழக்கத்தின் படி இணையத்தின் வாயிலாக முன்பதிவு செய்து தரிசனம் செய்யலாம்.

ஏப்ரல் மாதம் ஐயப்பன் கோயில் உற்சவத் திருவிழாவையொட்டி, சபரிமலை கோயில் நடை மாா்ச் 26- ஆம் தேதி மாலை திறக்கப்படுகிறது. 27-ஆம் தேதி காலை 9.45 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 10 நாள்கள் நடைபெறும் திருவிழாவை தந்திரி கண்டரரூ பிரம்மஸ்ரீ ராஜீவரரூ தொடங்கி வைக்கிறாா். ஏப்ரல் 5-ஆம் தேதி பம்பையில் ஐயப்பனுக்கு ஆராட்டு நடைபெறவுள்ளதாக சுனில் அருமானூா் தெரிவித்தாா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT