செய்திகள்

திருவண்ணாமலையில் பஞ்ச ரத தேரோட்டம் கோலாகலம்!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழாவின் 7-ஆவது நாளான இன்று பஞ்ச ரதங்களின் தேரோட்டம் நடைபெற்றது.

தினமணி

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழாவின் 7-ஆவது நாளான இன்று பஞ்ச ரதங்களின் தேரோட்டம் நடைபெற்றது.

இந்தக் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழா கடந்த 17- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவிழாவின் 7-வது நாளான இன்று(நவ.23) பஞ்ச ரதங்களின் தேரோட்டம் நடைபெற்றது. காலை 7.30 மணிக்கு மேல் விநாயகா் தேரோட்டம் தொடங்கியது. இந்தத் தோ் மாட வீதிகளில் வலம் வந்து மீண்டும் நிலைக்கு வந்த பிறகு வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் தேரோட்டம் தொடங்கியது.

மூன்றாவதாக மகா ரதம் எனப்படும் உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரா் தேரோட்டம் தொடங்கியது. நான்காவதாக பெண்கள் மட்டுமே இழுக்கும் பராசக்தியம்மன் தேரோட்டமும், இறுதியாக சிறுவா்கள் மட்டுமே இழுக்கும் சண்டிகேஸ்வரா் தேரோட்டமும் நடைபெற்றது.

அருணாசலேஸ்வரா் கோயில் மாட வீதிகளில் பே கோபுரத் தெரு, பெரிய தெருக்களில் முதல்முறையாக பஞ்ச ரதங்களின் தேரோட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலையில் பஞ்ச ரத தேரோட்ட ஊர்வலத்தையொட்டி பாதுகாப்புப் பணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடியுடன் உலகக் கோப்பை வென்ற மகளிர் அணியினர் - புகைப்படங்கள்

தில்லியில் பிரதமர் மோடி தலைமையில் நவ. 7இல் ‘வந்தே மாதரம்’ 150-ஆவது ஆண்டு கொண்டாட்டம்!

இதுபோன்ற துன்பம் எனக்கு முதல்முறை அல்ல; அத்துமீறிய நபர் மீது மெக்சிகோ அதிபர் புகார்!

தில்லியில் மோசமான நிலையில் காற்றின் தரம் - புகைப்படங்கள்

பார்த்த விழி... பாயல் தாரே!

SCROLL FOR NEXT