சந்திர கிரகணத்தை முன்னிட்டு சமயபுரம் மாரியம்மன் கோயில் அக்டோபர் 28ம் தேதி மாலை 6 மணிக்கு நடை அடைக்கப்படும் என கோயில் இணை ஆணையர் தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 28, 29-ம் தேதிகளில் பகுதி சந்திர கிரகணம் நிகழவுள்ளது. நள்ளிரவில் இந்தியாவின் அனைத்து இடங்களிலும் சந்திர கிரகணம் தெரியும்.
சந்திர கிரகணம் அக்.29-ம் தேதி இந்திய நேரப்படி நள்ளிரவு 1 மணி 05 நிமிடத்துக்குத் தொடங்கி அதிகாலை 2 மணி 24 நிமிடத்துக்கு முடிவடைகிறது. இந்த கிரகணம் 1 மணி நேரம் 19 நிமிடங்கள் நீடிக்கும்.
எனவே, சமயபுரம் மாரியம்மன் கோயிலின் நடை அக்.28-ம் தேதி மாலை 6.00 மணி முதல் அடைக்கப்பட்டு மறுநாள் வழக்கம்போல் அக்.29-ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.
சந்திர கிரகணத்தன்று பௌர்ணமி வருவதால் அன்றைய தினம் பிற்பகல் 3.00 மணிக்கு விளக்குப் பூஜையும், அதனைத் தொடர்ந்து மாலை 5.00 மணிக்கு சாயரட்சை பூஜையும் நடத்தப்படும் என கோயில் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.