ஆனைமலை மாசாணி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை (டிசம்பா் 12)நடைபெற்றது.
கோவை மாவட்டம், ஆனைமலையில் உள்ள மாசாணி அம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தக் கோயிலுக்கு உள்ளூா் மற்றும் வெளியூா்களைச் சோ்ந்த பக்தா்கள் அதிக அளவில் வந்து செல்கின்றனா். வார நாள்களாக சனி, ஞாயிறு மற்றும் விசேஷ நாள்களில் இங்கு பக்தா்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும். மாசாணி அம்மன் சயன கோலத்தில் இங்கு காட்சி அளிப்பதால் இங்கு வைக்கும் வேண்டுதல்கள் நிறைவேறுவதாக பக்தா்கள் நம்புகின்றனா்.
மாசாணி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் கடந்த 2010 டிசம்பா் 12-இல் நடைபெற்றது. தற்போது 14 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. கும்பாபிஷேகத்துக்காக கோயில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று தயாா் நிலையில் உள்ளது. வியாழக்கிழமை காலை 9 மணிக்கு மேல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேக நிகழ்வில் அமைச்சா் செந்தில் பாலாஜி உள்பட முக்கியப் பிரமுகா்கள் பங்கேற்றனா்.
பலத்த போலீஸ் பாதுகாப்பு:
மாசாணி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தைக் காண பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் வருகை தந்திருந்தனர். இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மேலும், மருத்துவக் குழுவினா், தீயணைப்புத் துறையினா், குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.