முகப்பு
செய்திகள்

திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாளை தேரோட்டம்!

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை நடைபெறுகிறது.

Updated On : 22 பிப்ரவரி, 2024 at 3:09 PM
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் வியாழக்கிழமை குவிந்த பக்தர்கள்.
பகிர்:
Updated On : 22 பிப்ரவரி, 2024 at 3:05 PM

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை(பிப்.23) தேரோட்டம் நடைபெற உள்ளது.

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆவணி மற்றும் மாசித் திருவிழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும்.

மாசித்திருவிழா புதன்கிழமை(பிப்.14) அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. பத்தாம் நாள் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை நடைபெறுகிறது.

Advertisement

திருவிழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத்தலைவர் ரா.அருள்முருகன், இணை ஆணையர் மு.கார்த்திக், அறங்காவலர்கள் அனிதா குமரன், பா.கணேசன், ந.ராமதாஸ், வி.செந்தில்முருகன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.