ஏகாம்பரநாதர் உற்சவ மூர்த்தி 
செய்திகள்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சிவராத்திரியையொட்டி மூலவர் மற்றும் உற்சவருக்கு ஆறு கால பூஜைகளானது நடைபெறவிருக்கிறது.

DIN

சிவராத்திரியையொட்டி காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரநாதர் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு இன்று காலை முதல் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

நாடு முழுவதும் இன்று சிவராத்திரி விழாவானது சிவன் கோவில்களில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோவில் நகரம் என்று அழைக்கப்படுவதும், ஒரு அடிக்கு 100 சிவலிங்கம் என்று அழைக்கப்படக்கூடிய புண்ணிய ஸ்தலமாக விளங்கும் காஞ்சிபுரத்தில் பஞ்சபூத ஸ்தலங்களில் நிலத்திற்குரிய ஸ்தலமாகப் போற்றப்படக்கூடிய காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் சிவராத்திரி விழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில், சிவராத்திரியையொட்டி மூலவர் மற்றும் உற்சவருக்கு ஆறு கால பூஜைகளானது நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில் ஆண்டுக்கு இருமுறை மட்டுமே சுற்றுப்பிரகாரத்தில் உள்ள சிவலிங்கங்களுக்கு நடைபெறும் அபிஷேகம் இன்று காலை சுற்றியுள்ள 108 சிவ லிங்கங்களுக்கு சிவனடியார்களால் அபிஷேகம் செய்து, வஸ்திரங்கள் கட்டப்பட்டு மாலைகள் சாற்றப்பட்டுள்ளதைப் பக்தர்கள் ஏராளமான கண்டு ரசித்துச் சென்று வருகின்றனர்.

அதேபோல் கோயில் முழுவதும் ஊழியர்களும் சிவனடியார்களாலும் சுத்தம் செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு சிவராத்திரியையொட்டி திருக்கோவில் மூலஸ்தானம் மற்றும் 1008 சிவலிங்க ஸ்தலம் அருகிலும் புஷ்ப அலங்காரங்கள் செய்யப்பட்டு அதேபோன்று திருக்கோயில் முழுவதுமே தென்னங்குருத்துக்கள் தொங்கவிடப்பட்டு மாயிலை தோரணங்கள் கட்டப்பட்டு ரம்மியமாகக் காட்சியளிக்கின்றன.

இரவு முழுவதும் நடைபெற உள்ள இந்த விழாவையொட்டி காஞ்சிபுரம் மட்டுமின்றி பல்வேறு மாவட்ட மாநிலங்களிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர் என்பதால் திருக்கோவில் நிர்வாகம் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பசியின் கோரம்! காஸாவில் குழந்தைகள் அழுவதற்குக்கூட முடிவதில்லை!

என்ன பார்வை... சைத்ரா!

இந்தியாவுக்கு 50% வரி உக்ரைன் போருக்கானது போல இல்லை: டிரம்பை சாடும் ஜனநாயகக் கட்சி

வியக்க வைக்கும் விஎஃப்எக்ஸ்... மிராய் டிரைலர்!

தில்லி பிரீமியர் லீக்: அறிமுகப் போட்டியில் அசத்திய ஆர்யவிர் சேவாக்!

SCROLL FOR NEXT